ஊக்க மருந்து! கோமதி மாரிமுத்து தங்கப் பதக்கம் பறிக்கப்படுகிறது! அதிர்ச்சி தகவல்!

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய கோமதி மாரிமுத்துவின் தங்கப்பதக்கம் பறிக்கப்பட உள்ளது.


கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றவர் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து. 800 மீட்டர் மகளிர் ஓட்டத்தில் 2.70 நிமிடங்களில் பந்தய தொலைவை கடந்து புதிய சாதனை படைத்தார் கோமதி. இதனை தொடர்ந்து அவர் தங்கம் வென்றார்.

இந்த நிலையில் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கு போட்டி நிறைவு பெற்ற பிறகு இரண்டு கட்டங்களாக ஊக்க மருந்து சோதனை நடத்தப்படும். அதன் அடிப்படையில் கோமதியின் சிறுநீர் மாதிரி சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. இதில் அவர் கத்தாரில் தங்கம் வென்ற போது தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது.

இதனை அடுத்து உடனடியாக அவர் தடகளப்போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. மேலும் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதியானால் போட்டியில் வென்ற தங்கம் பறிக்கப்படும். அந்த வகையில் கோமதியின் தங்கப்பதக்கத்தை பறிப்பதாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆசிய தடகள சம்மேளனம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் இந்த சோதனைக்கு எதிராக கோமதி மேல்முறையீட்டுக்கு சென்றால் மீண்டும் பரிசோதனை நடத்தப்படும். அதிலும் கோமதி ஊக்க மருந்து பயன்படுத்தியதாக முடிவு வந்தால் அவர் தடகளத்தில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படும். பறிக்கப்பட்ட பதக்கமும் திரும்ப வழங்கப்படாது.