கஞ்சா கடத்தல்! கிங்ஸ் லெவன் ஓனருக்கு 2 வருடம் ஜெயில்! சற்று முன் வெளியான அதிரடி தீர்ப்பு!

கஞ்சா கடத்தல் வழக்கில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியாவுக்கு 2 வரும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


தொழிலதிபர் நுஸ்லி வாடியாவின் மகனும், முகமது அலி ஜின்னாவின் கொள்ளுப் பேரனுமான நெஸ் வாடியா கடந்த மாதம் ஜப்பானின் ஹொக்காய்டோ தீவுக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் 25 கிராம் கஞ்சாவை தன்னுடன் எடுத்துச் சென்று இருந்தார்.

சோதனையின் போது அவரிடம் இருந்து அந்த கஞ்சா கைப்பற்றப்பட்டது. தனது சொந்தப் பயன்பாட்டுக் கொண்டு வந்ததாக நெஸ் வாடியா கூறினார். இதனை ஏற்க மறுத்த அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கில் இன்று வெளியான தீர்ப்பில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை ஜப்பானுக்கு கொண்டு வந்ததாக நெஸ் வாடியாவுக்கு 2 வருடம் சிறை தண்டனை விதித்தது ஜப்பானின் சப்போரா நீதிமன்றம். இந்த நெஸ் வாடியா நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் முன்னாள் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது.