நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் அதிரடி முடிவுகள்! டி.டி.வி. தினகான் குறித்து எடப்பாடி பழனிசாமி சீரியஸ் ஆலோசனை!

உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் படுபரபரப்பு நிலையில் எட்டியிருக்கும் நிலையில், அதுகுறித்து இறுதியான முடிவு எடுப்பதற்காக நாளை காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.


இட ஒதுக்கீடு, வார்டு வரையறை போன்ற பல்வேறு பிரச்னைகள் இன்னமும் தீர்க்கப்படாமலே இருக்கின்றன. மேலும் கூட்டணிக் கட்சியினர் இப்போதே அவரவர் தேவைகளை மேலிடத்துக்கு அனுப்பிக்கொண்டு இருக்கின்றனர்.

இதுதவிர, டி.டி.வி. தினகரனும் இந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்க இருப்பதாக உறுதியாகத் தெரியவந்துள்ளது. கடந்த இடைத்தேர்தலில் தினகரனும், கமல்ஹாசனும் களம் இறங்கவில்லை, அதனால் வெற்றி எளிதாகக் கிடைத்தது. இவர்கள் இருவரும் தேர்தலில் இறங்கினால், அ.தி.மு.க. வாக்குகள் சிதறிப்போய் வெற்றிக்குச் சிக்கலாகிவிடும் என்று அ.தி.மு.க. கருதுகிறது.

அதனால் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகுதான் நடத்தவேண்டும் என்று சொல்லிவிடலாமா அல்லது தோற்றாலும் பரவாயில்லை என்று தேர்தலை சந்திக்கலாமா என்பது குறித்து முடிவு செய்வதற்கு நாளை அமைச்சர்களைக் கூட்டி ஆலோசனை செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. உள்ளாட்சித் தேர்தலுக்குள் தினகரன் ஆட்களை முழுமையாக கலைக்க முடியுமா என்றும் யோசித்து வருகிறார்களாம்.