பாமகவுக்கு ராஜ்யசபா சீட் கிடையாது! கைவிரித்த எடப்பாடி! டென்ஷனாகும் ராமதாஸ்!

எப்படியும் தன்னுடைய மகன் அன்புமணியை எம்.பி.யாக்கி டெல்லிக்கு அனுப்பவேண்டும் என்பதுதான் டாக்டர் ராமதாஸின் ஒரே ஒரு கொள்கை. அதற்காகத்தான் சேரவே கூடாது என்று முடிவெடுத்த அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தார்.


ஒருவழியாக நாடாளுமன்றத் தேர்தல் முடிந்துவிட்டாலும், இன்னமும் மனங்கள் இணையவில்லையாம். ஆம், ராமதாஸை மேடையில் வைத்துக்கொண்டே, எட்டு வழிச்சாலையை மத்திய அரசு நிச்சயம் கொண்டுவரும் என்று பா.ஜ.க. தலைவர் பேசினார். அதேபோன்று நீட் தேர்வு கைவிடப்பட மாட்டாது என்பதையும் தெளிவாக அறிவிப்பு செய்தார்கள்.

இந்த விவகாரம் ராமதாஸ் மனதை புண்படுத்தி விட்டதாம். அதனால்தான் நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பிரசாரம் செய்ய போகவில்லையாம். அன்புமணியையும் போகவிடாமல் தடுத்து வைத்திருக்கிறாராம்.

இந்த விவகாரம் தெரிந்து எடப்பாடி டென்ஷன் ஆகியிருக்கிறார். வாங்கியதை வாங்கிக்கொண்டு, செய்ய வேண்டியதை செய்ய மறந்தால் என்ன செய்வது என்று கொந்தளித்திருக்கிறார். ஏனென்றால், எத்தனை சீட் வேண்டும் என்பது தொடங்கி, எந்தெந்தத் தொகுதியில் சீட் வேண்டும் என்பதையும் பா.ம.க.வே முடிவு செய்தது. அதனால்தான் விஜயகாந்த் கட்சிக்கு நல்ல தொகுதிகளை ஒதுக்க முடியவில்லை.

அதனால் அப்பாவும் மகனும் உடனே ஓடிவந்து ஒப்பந்தப்படி  பிரசாரம் செய்யவில்லை என்றால், ஒப்பந்தப்படி ராஜ்ய சபா சீட் தரமுடியாது என்று உறுதியாக சொல்லி அனுப்பியிருக்கிறாராம். என்ன செய்யப்போகிறார் ராமதாஸ். டயர் நக்கி என்று கிண்டல் செய்தவர்கள், அவருக்குப் பயந்து ஓடிவருவார்களா?