துரைமுருகன் மகனுக்கு ரயில்வேயில் புதிய பதவி! பொறந்தா தி.மு.க.வுல வாரிசா பொறக்கணும்!

போஸ்டர் ஒட்டுவதற்கு உடன்பிறப்புகள் வரிசைகட்டி நடுரோட்டில் நிற்கும் நிலையில், ஒரே குடும்பத்துக்கு வாய்ப்புகளும், பதவிகளும் வாங்கித்தருவது தி.மு.க.வின் பிறவிக்குணம்.


அந்த வகையில் துரைமுருகனும், அவரது அன்பு மகன் கதிர் ஆனந்தும் வேலூர் மாவட்டதை ஆட்சி புரிந்து வருகிறார்கள். சமீபத்தில் எம்.பி.யான கதிர் ஆனந்துக்கு புதிய பதவி கிடைத்துள்ளது.

ஆம், இன்று தெற்கு ரயில்வே பொதுமேலாளருடன் நடைபெற்ற எம்பிக்கள் கூட்டம் நிறைவு பெற்றது. அந்தக் கூட்டத்தில், ரயில்வே சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு தலைவராக கதிர் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டார். 

ரயில்வே சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவராக பிஆர் நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்பிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

உதயநிதி கட்சிக்கு வருவதை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக இன்னும் எத்தனை வாரிசுகள் தி.மு.க.வில் குதிக்கப்போகிறதோ.? அதுமட்டும் அல்லாமல் சென்னை கோட்ட ரயில்வே நாடாளுமன்ற குழு உறுப்பினர் பதவி என்பது அந்த கோட்டத்தில் பல்வேறு சலுகைகளை பெற வழிவகுக்கும். மேலும் ரயில்வே திட்டங்களிலும் கதிர் ஆனந்த் கூறும் நகரங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

இப்படி ஒரு பதவி இருக்கிறது என்பதை தெரிந்த துரைமுருகன் அழகாக காய் நகர்த்தி தனது மகனுக்கு பெற்றுக் கொடுத்துவிட்டார்.