யார் தவறாக நடந்தாலும் தட்டிக் கேட்போம்! மார்தட்டும் தமிழ் சினிமாவின் முதல் பாலியல் புகார் குழு!

சினிமாத்துறையில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக உள்புகார் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகைகள் குட்டி பத்மினி, சுஹாசினி, ரோகிணி, குஷ்பு, லலிதா குமாரி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.


இது குறித்து கூறிய நடிகையும் தயாரிப்பாளருமான லலிதா குமாரி, இந்த குழுவால், பாலியல் தொல்லைகள் நிச்சயம் குறையும் என நம்பிக்கை தெரிவித்தார். தங்கள் துறையில் உள்ள பெண்கள், பிரச்சினைகளை சமூக வலைதளங்களில் சொல்வதற்குப் பதில் தன்களிடம் புகாராகச் சொன்னால் தவறு செய்தவர்களிடம் ரைட் அண்ட் ராயலாக விசாரணை நடத்த முடியும் என்கிறார் அவர்.

சில நாள்களுக்கு முன் ஆர்.ஏ.புரத்தில் ஒரு பெண்ணை ஒருவன் அடித்துக் கொண்டிருந்ததை ஒருவன் அடித்துக்கொண்டிருந்ததை பார்த்த அனைவரும் கண்டும் காணாமல் சென்று கொண்டிருக்க தான் காரை நிறுத்தி இறங்கி ஏண்டா அடிக்கிறே? என அதட்டி, போலீஸில் புகார் கொடுத்துவிடுவென் என்று மிரட்டி அவனை விரட்டி விட்டதாகத் தெரிவித்தார். 

அந்தப் பெண் எஙகள் சொந்த விவகாரம் என்று சொல்ல சொந்த விவகாரமாக இருந்தால் வீட்டில் வைத்துக்கொள் என்றும், சாலையில் ஒருவன் தன் மனைவியை அடிப்பதை பார்த்தால் மற்ற ஆண்களுக்கு தைரியம் வரும் என்று கூறி அனுப்பி வைத்ததாகக் கூறும் லலிதா குமாரி,  கமிட்டியில் உறுப்பினராக இருப்பதால் மட்டுமன்றி இயல்பாகவே தனக்கு தவறுகளை தட்டிக் கேட்கும் குணம் உண்டு என்கிறார்.