வீட்டில் முடங்கிய ஸ்டாலின்..! கொரோனாவுக்கு எதிராக களமாடும் கனிமொழி..! ஆனால் முரசொலி செய்த மோசமான செயல்!

கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் தினந்தோறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி களம் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டில் முடங்கியுள்ளார். அதே சமயம் திமுக மகளிர் அணிச் செயலாளரும் ஸ்டாலின் தங்கையுமான கனிமொழி செய்து வரும் கொரோனா ஒழிப்பு பணிகளை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் இருட்டடிப்பு செய்து வருகிறது.


தமிழகத்தில் கொரோனா ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தினந்தோறும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம், நிவாரணம் அறிவிப்பு, ஆய்வுப் பணிகள் என்று பம்பரமாக சுற்றி வருகிறார். ஆனால் பிரதான எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினோ வீட்டிற்குள் முடங்கியுள்ளார்.

அதிலும் அவர் எங்கு இருக்கிறார் என்கிற தகவல் கூட வெளியாகவில்லை. மேலும் வீட்டில் இருந்த படி கட்சி நிர்வாகிகளுக்கு வீடியோ கால் செய்து கொரோனா எல்லாம் எப்படி இருக்கு என்று குசலம் விசாரித்து காமெடி வேறு பண்ணிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். இந்த நிலையில் திமுக மகளிர் அணிச் செயலாளரும் தூத்துக்குடி தொகுதி எம்பியுமான கனிமொழி தனது தொகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டை பார்வையிட்ட அவர் மருத்தவமனை டீன் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க 50 லட்சம் ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியை உடனடியாக வழங்கியுள்ளார். இது தொடர்பான செய்திகள் அனைத்து முன்னணி தொலைக்காட்சிகளிலும், செய்தித் தாள்களிலும் ஒளிபரப்பானது.

ஆனால் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் கனிமொழி ரூ.50 லட்சம் கொடுத்த செய்தி வெளியிடப்படவில்லை. இதற்கு காரணம் இருட்டு அடிப்பு என்கிறார்கள்.