பெரிய கண்கள்..! குட்டை கைகள்..! நீண்ட கால்கள்..! பூமியில் வேற்று கிரகவாசிகள்! வைரலாகும் வீடியோ உள்ளே!

டெல்லி: ஏலியன்கள் நிற்கும் காட்சி என்ற பெயரில் ட்விட்டர் உள்பட சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.


கடந்த 2017ம் ஆண்டு எடுக்கப்பட்டு, ட்விட்டர் பயனாளர் ஒருவரால் பகிரப்பட்ட இந்த வீடியோ  தற்போது மீண்டும் வைரலாக பரவ தொடங்கியுள்ளது. உண்மையில் வீடியோவில் இருப்பது ஏலியன்கள் இல்லை அதை உற்றுப்பார்த்தால் உண்மை புரியும். ஆம், அதில் இருப்பது ஆந்தைகள். இதனை சுட்டிக்காட்டி டேனியல் ஹாலண்ட் (@DannyDutch) என்ற ட்விட்டர் பயனாளர் ஒரு பதிவை தற்போது வெளியிட்டுள்ளார். ஆந்தைகளை பார்த்துவிட்டு, ஏலியன்கள் என நினைத்து பீதியடையும் மக்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.  

இதையடுத்து ஏலியன்கள் எனக் கூறி டிரெண்டிங் செய்தவர்கள் தங்களது கருத்தை மாற்றிக் கொண்டு, இதில் இருப்பது ஆந்தைகள்தான், யாரும் பீதியடைய வேண்டாம் என பதிவிட தொடங்கியுள்ளனர். அவசர கதியில் ஒரு விசயம் டிரெண்டிங் ஆவதும், உண்மை தெரிந்தபின் சப்பென போவதும் வழக்கம்தான். அதற்கு இந்த வீடியோ காட்சியும் ஒரு நல்ல உதாரணமாகும்.   

 இந்த வீடியோ உண்மையில், 2017ம் ஆண்டு ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டிணத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற ஒரு கட்டிடத்தில் எடுக்கப்பட்டதாகும்.