ஏற்கனவே 2 கணவன்கள்! 3வதாக தகாத உறவு! இளம் பெண்ணை கண்டித்த தந்தை! பிறகு அரங்கேறிய பயங்கரம்!

பெங்களூரு: இரண்டு முறை திருமணமாகியும் ஆசை அடங்காத மகள், தனக்கு தடையாக இருந்த தந்தையை ஆள் வைத்து கொலை செய்துள்ளார்.


 கர்நாடகா மாநிலம், ஹாசனை சேர்ந்தவர் முனிராஜூ. இவரது மகள் வித்யா, 2 முறை திருமணமானவர். இந்நிலையில், வித்யா, அதே பகுதியை சேர்ந்த சதானந்தா என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இதுபற்றி தெரியவந்ததும், முனிராஜூ கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதவிர, சதானந்தா அவ்வப்போது கூலிப்படை வேலை செய்வதும் உண்டு. இதன்பேரில், வித்யா, தனது தந்தையை கொல்லும்படி ரூ.15 லட்சம் பணத்தை சதானந்தாவிற்கு கொடுத்திருக்கிறார்.  இதையடுத்து, மனிகனஹள்ளி அருகே ஹேமாவதி ஆற்றங்கரை ஓரமாக, முனிராஜூவை கொன்று, சடலத்தை சதானந்தா வீசிவிட்டார்.

இச்சம்பவம் பற்றி எதுவுமே தெரியாததுபோல, நடமாடி வந்த வித்யா, தனது தந்தையை காணவில்லை என்றும் போலீசில் போலியாக ஒரு புகார் கூறியுள்ளார். இந்த புகார்தான் அவருக்கே ஆப்பாக மாறிவிட்டது. ஆம். வித்யா கொடுத்த புகாரை மிக தீவிரமாக விசாரிக்க தொடங்கிய போலீசார், படிப்படியாக, இதில், வித்யாவும் அவரது கள்ளக்காதலன் சதானந்தாவும் ஈடுபட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு, அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.  முனிராஜூவை கோடாரியால் வெட்டி பின்னர் கத்தியால் குத்தி கழுத்தில் கேபிள் கட்டி இறுக்கி கொன்றதாக, அவர்கள் 2 பேரும் போலீசில் ஒப்புக் கொண்டுவிட்டனர். பெற்ற மகளே, இப்படி தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.