பெண்களின் உள் ஆடைகளை வீடு வீடாக சென்று திருடும் விநோத மனிதன்..! சென்னை விபரீதம்!

சென்னையில் அரை நிர்வாணமாக வந்து குடியிருப்புகளில் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு தினங்களுக்கு முன்பு அங்கு வசித்து வரும் குடும்பத்தினர் காலை எழுந்து பார்க்கையில் வீட்டின் ஜன்னல் கதவுகள் திறந்து இருந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

பின்னர், உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சி பதிவை எடுத்து பார்க்கையில், நள்ளிரவில் அரை நிர்வாணத்துடன் வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டின் ஜன்னல்களை திறந்து உள்ளே கைவிட்டு பெண்களின் ஆடைகள் மற்றும் கிடைக்கும் பொருட்களை வாரி சுருட்டிக் கொண்டு சென்றுள்ளான்.  

இதைக்கண்டு பதறிப்போன குடும்பத்தினர், உடனடியாக அருகிலிருந்த ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்திருக்கின்றனர். இந்த சிசிடிவி பதிவு ஆராய்ந்த போலீசார் அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். நள்ளிரவில் அரை நிர்வாணமாக வீடு புகுந்து திருடிச் செல்லும் இந்த சைக்கோ யார் என்பது தற்போது வரை மர்மமாகவே இருக்கிறது.