சென்னையில் புற்று நோய் வாழைப் பழம்! அதிர வைக்கும் ரிப்போர்ட்! உஷார் மக்களே!

எத்தலின் ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் வாழைப் பழங்களால் புற்று நோய் வரும் பாதிப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அது சென்னை கோயம்பேட்டில் பழுக்க வைக்கப்படுகிறது என்பது நமக்கு கிடைத்துள்ள கூடுதல் அதிர்ச்சி தகவல்.


எத்தலின் ரசயானம் என்பது எளிதில் புற்றுநோயை வரவழைக்கக் கூடியது. சென்னை கோயம்பேட்டில் வெளி மாநிலங்களில் இருந்து வாழைப்பழ தார்கள் கொண்டு வந்து விற்கப்படுகிறது. வாழை பழங்களை புகைபோட்டு பழுக்கவைத்து வந்த வியாபாரிகள், இப்போது புதிய தொழில்நுட்பமாக எத்திலின் ராசாயனம் கலந்த தண்ணீரை ஊற்றி பழுக்கவைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இது குறித்து புகார் வந்தவுடன் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பழங்கள் அங்காடிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்க எத்திலீன் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ வாழை தார்களை அப்புறப்படுத்தி குப்பை கிடங்கில் போட உத்தரவு பிறப்பித்தனர்.

பச்சை நிறத்தில் இருக்க வேண்டிய காம்பு மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது எத்திலின் ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்டிருப்பதை எளிதாக கண்டறியலாம். எத்திலின் ரசாயனம் தியாகராய நகரில் தடையின்றி விற்கப்படுவதாகவும் அதை பழ வியாபாரிகள் வாங்கிச் செல்வதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இருட்டு அறையில் பத்திக்கட்டை கொளுத்தி வைத்து 8 மணி நேரத்தில் பழங்கள் பழுக்கவைக்கப்படுவதுதான் வழக்கமான ஒன்று. எத்திலின் ரசாயனத்தால் 2 மணிநேரத்தில் பழுக்கும் பழங்களால் சுவையும் ஆரோக்கியமும் மிக்க வாழைப்பழம் மெல்லக் கொல்லும் விஷமாகி போனது . இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் புற்று நோய் வரும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என கூறுகின்றனர்.