10 வயது மாணவ, மாணவிகளுக்கு பாலுணர்வை தூண்டும் பாடத்திட்டம்! கொதிக்கும் பெற்றோர்!

பிரிட்டனில் 6 வயது முதல் 10 வயது வரையிலான 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாலுணர்வை தூண்டும் வகையில் புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.


பிரிட்டனில் வார்விஷயர் கவுண்டி என்ற பகுதியில் 240 ஆரம்ப நிலைப் பள்ளிகள் உள்ளது. அதாவது 1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் சொல்லித் தரும் நர்சரி பள்ளிகள். இங்கு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு தங்கள் அந்தரங்க பகுதிகளை தொட்டுப் பார்த்து உணர்வுகளை தெரிந்து கொள்ளும் வகையில் புதிய பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

தற்போது வார்விஷயர் கவுண்டியில் அறிமுகப்படுத்தப்படும் பாடத் திட்டம் பின்னர் நாடு முழுவதும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிறுவர்கள் இந்த வயதில் இதுபோன்று செயல் முறையில் ஈடுபட்டால் அடுத்த கட்டமாக எதிரில் உள்ள மாணவியையோ, மாணவனையோ தொட்டுப் பார்க்கும் நிலை ஏற்படும் என்றும் அது பாலியல் ரீதியான தவறுகள் செய்ய தூண்டி விடும் என்றும் பெற்றோர் எச்சரித்து உள்ளனர்.

ஆனால் பள்ளிக் கல்வித் துறை தரப்பில் இது ஒரு சாதாரண விஷயம் என்றும் பயப்படும் அளவுக்கு ஒன்றும் ஆகாது என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது. ஆனாலும் அங்குள்ள கல்வியல் நிபுணர்கள் ஆசிரியர்கள் இந்த பாடத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த மாதத்தில் வடமாநிலத்தில் 1ம் வகுப்பு மாணவிக்கு 2ம் வகுப்பு படிக்கும் மாணவன் பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்தது. இதனால் அந்த சிறுமி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் அளவுக்கு பாதிக்கப்பட்டார். பாலியல் கல்வி இல்லாமலேயே.