பொன்னாருக்கு கருப்புக்கொடியும் செருப்படியும் ரெடி! டென்ஷன் தி.மு.க!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேவலமாக தோற்றுப்போனவர்களில் ஒருவர் பொன்.ராதாகிருஷ்ணன். மத்திய அமைச்சராக இருந்து ஒரே ஒரு பாலம் கொண்டுவந்தது தவிர உருப்படியாக எதுவும் செய்யாதவர். அந்தப் பால விவகாரத்திலும் பல ஊழல் நாற்றம் அடிக்கிறது.


இந்த நிலையில், மக்களுக்கு நகைக்கடன், விவசாயக்கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்வதாகச் சொல்லித்தான் தி.மு.க. வெற்றி பெற்றது. இப்போது 37 எம்.பி.க்களும் அவர்களது சொத்துக்களை விற்று, சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்று அறிவித்து இருக்கிறார். இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்டு தி.மு.க. கடும் கோபத்தில் இருக்கிறது. ஏனென்றால், சமீபத்தில் ஆ.ராசா நன்றி அறிவிக்கப் போன இடத்தில், அ.தி.மு.க.வினர் சிலர், நகைக்கடன் சீட்டைக் கொண்டுவந்து காட்டி எரிச்சல் ஊட்டினார்கள். இதுபோல் பலரும் செய்ய திட்டமிட்டிருப்பதாகத் தகவல்.

இந்த சூழலில் பொன்னாரும் இப்படி பேசியதில் தி.மு.க. தலைமை கடும் அதிருப்தி அடைந்திருக்கிறதாம். இப்படியெல்லாம் பேசவிட்டு அமைதியா இருந்தா, இன்னமும் அதிகமாப் பேசுவாங்க, அதனால கடுமையாக ரியாக்ட் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளதாம். பொன்னார் கலந்துகொள்ளும் போது கருப்புக்கொடி காட்டுவதுடன், செருப்பைத் தூக்கி அடித்தாலும் சரிதான் என்று தி.மு.க.வினருக்கு கட்டளை போடப்பட்டுள்ளதாம். பொன்னாருக்கு கெட்ட நேரம்தான்.