பிக்பாஸ் வீட்டிற்க்குள் வந்ததும், வேலையை காட்டிய வனிதா! ஆடிப்போன ஹவுஸ் மேட்ஸ்!

பிக் பாஸ் வீட்டிற்க்குள்ளாக அதிரடி மாஸ் வரவேற்புடன் நுழைந்துள்ள வனிதா, ஏற்கனவே எலிமினேட் ஆனவர் தான் என்றாலும் கூட களம் நிசப்தம் ஆனதும் சூடு ஏற்ற வந்துள்ளார்.


வனிதா வீட்டில் இருந்து சென்ற பின்னர் வீட்டிற்க்குள் நடக்கும் எல்லா அட்டூழியங்களுக்கும் ஒருபக்கம் இதெல்லாம அவங்க இருந்த நடந்து இருக்குமா? வனிதா இருந்த இப்படி பேச முடியுமா என பல கேள்விகள் எழுந்த நிலையில்,

நேற்றைய நிகழ்ச்சியில் மூக்கு வேர்த்தது போல மாசாக நுழைந்த வனிதா, வந்தவுடன் சேரனுக்கு லேசான குட்டுடன் பேசினார், அதனோடு செரினை தனியாக அழைத்து சென்று பேசியது,

மற்ற ஹவுஸ் மேட்ஸ்க்கு இலேசான பீதியை கிழப்பியது எனலாம் அதிலும் அவர் வீட்டிற்க்குள் நுழைய போது, நம்ம சாண்டி மாஸ்டரும் தர்ஷனும் கொடுத்த அந்த ரியாக்‌ஷன் மட்டுமே சமூக வலைதளங்களில் தனி டிரெண்டாகி வருகிறது.

அதிலும் செரினை தனியாக அழைத்து சென்ற வனிதா, தேவையில்லாமல் உன்னை மற்றவர்கள் ஏன் புகழ வேண்டும், புகழ்கிறார்கள் என்றாலே நிச்சயமாக உனை கவிழ்க்க போகிறார்கள் என ஏத்திவிட,

சாக்‌ஷி இல்லாமல் துவண்டு போன செரினுக்கு, தனி எனர்ஜி பூஸ்டாகவே மாறியுள்ளது வனிதா ரீ எண்டிரி, அதிலும் மற்ற ஹவுஸ் மேட்ஸ் சற்று கலக்கத்தில் தான் இருக்கிறார்கள்.