ஷெரீன் ஸ்கர்ட்டுடன் கவின் போட்ட கெட்ட ஆட்டம்! மீரா டிரஸ்சுடன் பாண்டியின் சேட்டை! கலவர பூமி காமெடி பூமியானது!

பிக் பாஸ் வீட்டின் கவர்ச்சி நாயகியாக மாறிய கவின் அடித்த லூட்டி காண்போரை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.


11 ஆவது நாள் டாஸ்க்காக அவ்வை சண்முகி டாஸ் கொடுக்கபட்டது அதன் படி வீட்டிலு உள்ள ஆண்கள் அனைவரும் பெண் போல வேடம் அணிந்து அந்த வாரம் முழுவதும் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை தொகுத்து வழங்க வேண்டும்

அதன்படி நேற்று பாத்திமா பாபு போலவே அதீத மேக்கப் அணிந்து நடந்து காட்டிய சரவணன் அசத்தியதை அடுத்து கவின் செரினின் கவர்ச்சியான ஆடையை அணிந்து நடத்திய அக்கப்போருக்கு அளவே இல்லை.

அதிலும் செரின் கோவத்தில் பேசும் வார்த்தைகளை அப்படியே இமிடேட் செய்து காட்டி அசத்தியது காண்போரை வயிறு குலுங்க சிரிக்க செய்தது.மேலும் அவரை போன்ற நடை அவர் மற்ற ஹவுஸ் மேட்ஸ் உடன் நடந்துக்கொள்ளும் விதம் என தத்துரூபமாக செரினை கண் முன் நிறுத்தினார் கவின்.

இதில் அந்த வாரம் முழுக்க நடந்த மொத்த சண்டைகளின் ஹைலைட்ஸ் அவர்கள் நடித்து காண்பித்தனர். அதிலும் சாண்டி மீரா போல வேடமிட்டதும், அவரை போன்றே நடந்து காண்பித்ததும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும் மது போல வேடமிட்டிருந்த மோகனை ஒரு ஓரமாக அழைத்து சென்று நாமெல்லாம் கார்னர் என அப்பட்டமாக அசத்தி காட்டியது காண்போரை ரசிக்கத்துண்டியது.