பால்தாக்கரே பேரன் துணை முதல்வராம்! சிவசேனாவில் நுழைந்த வாரிசு அரசியல்! அதிர்ந்துநிற்கும் பா.ஜ.க!

சிவசேனா கட்சியை துவக்கிய பால் தாக்கரே குடும்பத்தில் இருந்து யாரும் தேர்தலில் நின்று அரசு அதிகாரப் பதவிக்கு வந்ததில்லை.


இப்போது நடைபெற இருக்கும் மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் பால் தாக்கரேயின் பேரனும், உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்யா தாக்கரே போட்டியிடப் போகிறார்.

இந்தத் தேர்தலில் பிஜேபியும் சிவசேனையும் கூட்டணி அமைத்துப் போட்டி இடுகின்றன.மொத்தமுள்ள 288 தொகுதிகளில் சிவசேனா 126 தொகுதிகளிலும்,பிஜேபி 148 தொகுதிகளிலும் போட்டி இடுகின்றன.இந்தக் கூட்டணியில் இணைந்து நிற்கும் சிவசேனா வேட்பாளர்களும் தாமரைச் சின்னத்திலேயே நிற்க ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.

இப்போதைய முதலமைச்சரான பட்நாவிசையே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்கிறது.பிஜேபி ஆட்சி அமைத்தால் சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி தருவதாக சொல்லி இருப்பதால் உத்தவ் தாக்கரே தங்களது குடும்பத்தில் இருந்து தனது மகன் ஆதித்ய தாக்கரேவை களத்தில் இறக்குகிறார்.

வழக்குரைஞரான ஆதித்யா தாக்கரேவுக்கு 29 வயதாகிறது.16.5 கோடி சொத்து வைத்திருக்கிறார்.சிவசேனாவின் இளைஞரணித் தலைவராக இருக்கிறார்.மும்பையில் ஓர்லி தொகுதியில் போட்டியிடும் ஆதித்யாவுக்கு எதிராக சரத்பவார் ஒரு டம்மி வேட்பாளரை நிறுத்தி இருப்பதால் ஆதித்யா வெற்றி பெறுவதும்,துணை முதல்வராவதும் உறுதி என்கிறார்கள்.