ஜல்லிக்கட்டு போராட்டமும்! அத்திவரதர் தரிசனமும்! பக்தியா? விளம்பர மாயையா? இதே உண்மை!

அத்திவரதர் 40 நாட்கள்தான் தரிசனம் என்றதும் தமிழகத்தில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு மிகப்பெரிய ஆன்மிகப் புரட்சி ஏற்பட்டுவிட்டது


அத்திவரதர் 40 நாட்கள்தான் தரிசனம் என்றதும் தமிழகத்தில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு மிகப்பெரிய ஆன்மிகப் புரட்சி ஏற்பட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஸ்டாலின் மனைவி துர்கா, ராஜாத்தி தொடங்கி அத்தனை அரசியல்வாதிகளின் குடும்பத்தினரும் வரிசையில் நிற்கின்றனர்.

இந்தக் கூட்டம் உண்மையிலே பக்தியினால் வருகிறார்களா என்று பலரும் சந்தேகம் எழுப்புகிறார்கள். ஏனென்றால், ஜல்லிக்கட்டு விளையாட்டை பார்த்திராதவர்கள், ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்தான் மெரினாவில் கூட்டம் கூட்டமாக குவிந்தார்கள். அப்படியொரு நிலைமைதான் அத்திவரதருக்கும் ஏற்பட்டுள்ளது.

அக்கம்பக்கத்து வீட்டினர், ஊரில் இருந்தவர்கள் போய் அத்திவரதரை பார்த்துவிட்டார்கள், நாமும் பார்த்தேயாக வேண்டும் என்று கிளம்பும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுவும் ஒரு வகையில் பக்தி மட்டுமே என்கிறார்கள்.

ஷெஃல்பி எடுத்து கொண்டாடும் மனப்பான்மை பக்தர்களிடம் இருக்கிறது என்றாலும், எட்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்வது மிகப்பெரிய பக்தி என்றே கருதவேண்டும். ஏனென்றால், இன்று வீட்டில் சொகுசாக அமர்ந்து பொழுதுபோக்குவதுதான் மக்களின் மனப்பான்மையாக மாறிவிட்டது.

எத்தனை கஷ்டப்பட்டாவது அத்திவரதரை தரிசிக்க வேண்டும் என்பதை ஜல்லிக்கட்டுடன் தொடர்புபடுத்தி கேவலப்படுத்த வேண்டாமே...