வாய்ப்பு கேட்டு போன அருண் பாண்டியன் மகள்! இயக்குனர்கள் கொடுத்த விபரீத அனுபவம்!

திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற இடங்களில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை கீர்த்தி பாண்டியன் பேட்டியாக அளித்துள்ளார்.


நடிகர் அருண் பாண்டியனை தெரியாத தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது. ஊமை விழிகள் படத்தில் அருண் பாண்டியனின் நடிப்பு பலருக்கும் தற்போதும் நினைவில் இருக்கும். தமிழ் சினிமாவில் மிக முக்கியமான தயாரிப்பாளராகவும் அருண் பாண்டியன் திகழ்ந்து வருகிறார்.

இவரது மகள் கீர்த்தி பாண்டியன். சென்னை வைஷ்னவா கல்லூரியில் படித்து முடித்துவிட்டு தந்தையின் சினிமா பிசினசை கவனித்து வந்தார் கீர்த்தி. ஒரு கட்டத்தில் மாடலிங்கில் கீர்த்திக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் மாடலிங்கில் கீர்த்தியால் முன்னேற முடியவில்லை.

இந்த நிலையில் நடிப்பின் மீதான ஆர்வத்தில் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். கீர்த்தியின் நடிப்பு பலரால் பேசப்பட்டது. இந்த நிலையில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கீர்த்திக்கு ஆசை தலை தூக்கியுள்ளது.

தந்தையின் பெயரை பயன்படுத்தாமல் படத்தில் வாய்ப்பு தேடி அலைந்துள்ளார் கீர்த்தி. வாய்ப்பு கேட்டு சென்ற இடங்களில் ஒவ்வொரு இயக்குனரிடமும் கீர்த்திக்கு ஒவ்வொரு அனுபவம் கிடைத்துள்ளது. ஆனால் பெரும்பாலும் கீர்த்திக்கு எந்த இயக்குனரும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

இது குறித்து பேசிய கீர்த்தி தான் தனது தந்தையின் பெயரை எங்குமே பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார். இதனால் இயக்குனர்கள் பலரும் தன்னை நடிக்க வைத்து கூட பார்க்காமல் ரிஜக்ட் செய்ததாக கூறியுள்ளார். சில இடங்களில் விபரீதமான அனுபவம் கூட கிடைத்ததாகவும் அது குறித்து பேசவிரும்பவில்லை என்றும் கீர்த்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே தற்போது கீர்த்தி குழந்தைகளுக்கான கதை அம்சத்துடன் கூடிய படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு தற்போது வரை பெயர் சூட்டப்படவில்லை. மே மாதம் வெளியாக உள்ளது.