புதிய காதலனுடன் குளிக்கும் வீடியோ! நடிகை நிலானியை சுற்றும் புதிய பிரச்சனை!

வெளிநாட்டில் பணிபுரியும் பொறியாளர் மீது நடிகை நிலானி சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.


ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது காவலர் சீருடையில் வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் நிலானி. இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கணவனிடமிருந்து பிரிந்து தனது குழந்தைகளுடன் வசித்து வந்த அந்த நடிகையுடன் நெருக்கமாக இருந்த நபர் என்று கூறப்படும் லலித் காந்தி சில மாதங்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

நிலானி தன்னை விட்டு பிரிந்தது இதற்கு காரணம் என்று அவர் கூறியிருந்தார். இந்த சர்ச்சையை தொடர்ந்து தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் நிலானி சிக்கியுள்ளார். லலித் காந்தி தற்கொலையின் போது தனக்கு ஆதரவளித்த மஞ்சுநாத் என்ற மென்பொறியாளரை  அந்த நடிகை காதலித்ததாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் பணிபுரியும் மஞ்சுநாத் என்ற மென் பொறியாளரிடம் நிலானி நெருக்கம் காட்டி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அவருக்கு ஏற்கனவே திருமணமான செய்தியறிந்த நிலானி அவரை விட்டு பிரிந்தார். ஆனால் ஆத்திரமடைந்த மஞ்சுநாத் நிலானியுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் குளிக்கும் போது எடுத்த வீடியோக்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாக நிலானி குற்றம் சாட்டியுள்ளார்.

தன்னையும் தனது குழந்தைகளையும் கொன்று விடுவதாக மஞ்சுநாத் மிரட்டுவதாகவும் அந்த நடிகை குற்றம் சாட்டி சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். மேலும் மஞ்சுநாத் தனது செல்போன் எண்ணை பலருக்கும் கொடுத்து ஆபாசமாக பேச வைப்பதாக அந்த நடிகை குற்றம் சாட்டியுள்ளார்.