இளைஞரின் மனைவி அபகரிப்பு! ராகவா லாரன்சின் தம்பி எல்வின் மீது பரபரப்பு புகார்!

இளைஞர் ஒருவரின் மனைவியை அபகரித்துக் கொண்டதாக நடிகர் ராகவா லாரன்சின் தம்பி எல்வின் மீது பரபரப்பு புகார் கூறப்பட்டுள்ளது.


சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயல் தென்றல் நகரை சேர்ந்தவர் உதயசங்கர். இவரது மனைவி தீபிகா. தீபிகாவுக்கு நடனத்தின் மீது தீராத ஆசை.

 

இதனால் போரூரில் நடனப்பள்ளி நடத்தி வரும் எல்வினிடம் நடனம் கற்றுக் கொள்ள தீபிகா சென்றுள்ளார். அப்போது இவர்களுக்கு ஏற்பட்ட பழக்கம், முறையற்ற காதலனதாக உதயசங்கர் தெரிவித்துள்ளார். பலமுறை கூறியும் மனைவி எல்வினுடன் பழக்கத்தை விடவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில் உதயசங்கரிடம் இருந்து விவாகரத்து கோரி தீபிகா திருவள்ளூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.   இந்த நிலையில் உதய சங்கர் திடீரென மாயமாகியுள்ளார்.

 

இரண்டு நாட்களாக உதயசங்கர் வீடு திரும்பவில்லை. தீபிகா மற்றும் எல்வின்வினு ஆகியோர் மீது சந்தேகம் உள்ளதால் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு உதயசங்கரின் தாயார் சாந்தி புகார் அளித்துள்ளார்.

 

இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் ஒருவரின் மனைவியை அபகரித்த புகாரில் லாரன்சின் தம்பி மீது அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.