செல்போனில் வெறும் செல்ஃபி மட்டுமே எடுத்து லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் இளம் பெண்!

இங்கிலாந்தில் ஒரு இளம் பெண் வேலைக்குச் செல்லாமல் செல்ஃபிகளை இணையதளம் ஒன்றில் பதிவிட்டே பணம் ஈட்டிக் கொண்டிருக்கிறார்.


பணம் ஈட்டுவது உழைப்பு சார்ந்தது என்பது ஆழ்ந்த நம்பிக்கையும், நடைமுறையாகவும் இருந்தாலும், சில நேரங்களில் தங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளும், அதிர்ஷ்ட தருணங்களும் கூட பணம் கொட்டக் காரணமாகி விடுகின்றனர்.

அந்த வகையில் பணம் ஈட்டத் தொடங்கியவர்தான் இங்கிலாந்தின் கன்னோக் என்ற இடத்தைச் சேர்ந்த இளம் பெண்ணான லூட்டி மைல்ஸ். பெயருக்கு ஏற்ப லூட்டியடித்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருப்பவர். வீட்டில் எப்போதும் செல்ஃபோனும் கையுமாகச் சுற்றிக் கொண்டிருக்கும் லூட்டியின் செல்ஃபி மோகம் குறித்து சொல்லவும் வேண்டுமோ?

கழுத்தைத் திருப்பிக்கொண்டும், நாக்கைத் துருத்திக்கொண்டும் விதவிதமான கோணங்கி சேட்டைகளைச் செய்துகொண்டும் செல்ஃபி எடுத்து இவர் வெளியிடும் செல்ஃபிக்கள் குடும்பத்தினர்கள், நண்பர்களைக் கவர்ந்த நிலையில் அதனைக் கொண்டே பணம் ஈட்டும் வாய்ப்பும் ஒரு நாள் லூட்டிக்கு வந்தது.

லூட்டியின் நண்பர்கள் ஒன்லி ஃபேன்ஸ் என்ற இணையதளத்தைப் பற்றிக் கூறினர். இந்த இணையதளத்தைக் காண்பவர்கள் எல்லாம் பெயருக்கேற்ப ரசிகர்கள் மட்டுமே இந்த இணையதளத்தில் பதிவிடப்படும் புகைப்படங்களைக் கொண்டு வருமானம் ஈட்டப்படுகிறது. அந்த வருமானத்தில் 80 சதவீதம் வரை செல்ஃபி எடுத்து பதிவிடுபவர்களுக்கு கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 

கடந்த ஜனவரி மாதம் முதல் அதில் செல்ஃபிக்களை பதிவிடத் தொடங்கிய லூட்டி தற்போது வரை 7,400 டாலர்கள் ஈட்டியிருப்பதாகக் கூறுகிறார். வேறு வேலை கிடைக்கும் வரை இதைச்  செய்யலாம் என நினைத்து தொடங்கியதாகவும், ஆனால் தற்போது முழு நேரமாகச் செய்யத் தொடங்கியிருப்பதாகவும் சொல்கிறார்.