தமிழ் திரையுலகில் பிரபல ஹீரோவாக வலம் வரும் முன்னணி நடிகரின் மகளுடன் இளம் நடிகர் ஒருவர் மிகவும் நெருக்கமாக பழகுவதாக சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஹீரோவின் மகளிடம் நெருக்கம் காட்டும் இளம் ஹீரோ..! படப்பிடிப்பு தளத்தில் பற்றி எரியும் கெமிஸ்ட்ரி! எங்கு போய் முடியப்போகுதோ?
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அந்த இளம் நடிகர் தமிழ் சினிமாவிலும் கதாநாயகனாக நடித்துள்ளார். அந்த இளம் நடிகருக்கு தெலுங்கு திரை உலகத்தை போலவே தமிழிலும் ஏகோபித்த ரசிகர்களின் வரவேற்பு உள்ளது. தற்போது அந்த நடிகர் தமிழ் , தெலுங்கு மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் நடிக்கிறார்.
இத்திரைப்படத்தினை இந்தி தொலைக்காட்சிகளில் காஃபி நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் இயக்குனர் ஒருவர் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் அந்த இளம் நடிகருக்கு ஜோடியாக தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபல நடிகரின் மகள் நடிக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் இடைப்பட்ட கெமிஸ்ட்ரி காட்சிகள் மிக அருமையாக படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் நட்பாக பழகிய விழுவது உறவு தற்போது வலுவடைந்து மிகுந்த நெருக்கத்துடன் காணப்படுவதாக கிசுகிசுக்கப்படுகிறது.