கருத்தடை மாத்திரை பயன்படுத்தியும் கர்ப்பம்! ஸ்கேன் செய்து பார்த்த பிறகு தெரிய வந்த மேலும் ஒரு அதிர்ச்சி!

தொடர்ந்து கருத்தடை மருந்து சாப்பிட்டு வந்த பெண்ணிற்கு வயிற்றில் புற்றுநோய் கர்ப்பம் ஏற்பட்ட சம்பவமானது பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டில் கிரேஸ் என்ற பெண் வசித்து வந்தார். இவருடைய வயது 23. இவருடைய கணவரின் பெயர் ஜோ கவுளிங். இவருக்கு ஓராண்டு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கருத்தடை மாத்திரைகளை சாப்பிட்டு கணவன்-மனைவி உடலுறவு கொண்டு வந்தனர். 

ஆனால் அவர் திடீரென்று கர்ப்பம் அடைந்தார். கர்ப்பம் அடைவதற்கான அறிகுறிகள் மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டன. பெருமகிழ்ச்சி அடைந்த கணவன்-மனைவி குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வந்தனர்.

ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. கிரேஸ் காலை வியாதியால் பெரிதளவில் அவதிப்பட்டு வந்தார். அவருடைய வயிற்றில் ரத்தப் புள்ளிகள் இடம்பெற்றன. இதனால் மிகவும் பயந்து போன தம்பதியினர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தனர்.

மருத்துவர்களுக்கு குழந்தை வளர்வதற்கான எவ்வித அறிகுறியும் தெரியவில்லை. மேலும் குழந்தைக்கு பதிலாக வயிற்றில் புற்றுநோயே வளர்ந்திருந்தது. இது மோலார் கர்ப்பம் என்று மருத்துவர்கள் தம்பதியினரிடம் கூறியுள்ளனர்.

உடனடியாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் புற்றுநோய் கட்டியை அகற்றியுள்ளனர். மீண்டும் ஏற்படுவதற்கு 15 சதவீத வாய்ப்பிருப்பதால் ஓராண்டிற்கு உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.