மனைவியின் அந்தரங்க வீடியோவை நேரலையில் கொடுத்த ஸ்மார்ட் டிவி! லேப்டாப்பில் பார்த்து அதிர்ந்த வெளிநாட்டு கணவன்!

மனைவியின் அந்தரங்க புகைப்படங்கள் வெளிநாட்டில் இருக்கும் கணவருக்கு சென்ற சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு எனும் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் இளைஞர் வசித்து வந்தார். திருமணமான பிறகு வேலை நிமித்தமாக அவர் வெளிநாட்டுக்கு சென்றார். அவருடைய கணினியில் சில புகைப்படங்கள் பதிவாகியிருந்தன.

அதனை பதிவிறக்கம் செய்து பார்த்த போது, மனைவியின் அந்தரங்க காட்சிகள் பதிவாகி இருந்தன. மேலும், மனைவியின் உடைமாற்றும் காட்சிகளும் பதிவாகியிருந்தன. பதறிப்போன அவர் தன்னுடைய மனைவியிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது அவருடைய மனைவி ரகசியமாக யாரோ அந்தரங்க காட்சிகளை படம் எடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார். வெளிநாட்டில் இருந்துகொண்டு கேரள மாநிலத்தின் சைபர் கிரைம் காவல்துறையினரின் உதவியுடன் மனைவியின் புகைப்படங்களை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மேலும் படம் பிடித்தவர்களுக்கு உரிய தண்டனை வாங்கித்தர வேண்டும் என்று முழுவீச்சில் ஈடுபட்டார்.

மிlகப்பெரிய சைபர் கிரைம் வல்லுநர்கள், புகைப்படங்கள் எங்கிருந்து பகிரப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவருடைய கேரளா வீட்டிலிருந்து புகைப்படங்கள் பகிரப்பட்டதை கண்டுபிடித்தனர். உடனடியாக அதிகாரிகள் அவருடைய வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அவருடைய படுக்கை அறையில் ஸ்மார்ட் டிவி பொருத்தப்பட்டிருந்தது. அந்த ஸ்மார்ட் டிவியின் மூலம் தன்னுடைய கணவருடன் மனைவி தினமும் வீடியோ சாட்டிங் செய்வார் ‌

இந்நிலையில் கேமராவை ஆஃப் செய்ய மறந்ததால் அதன்பிறகு அவருடைய செயல்கள் அனைத்தும் அவருடைய கணவருக்கு சென்றுள்ளன. பரிசோதனைக்கு சென்ற அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் ஸ்மார்ட் டிவி எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் அவர் செய்த தவறையும்  சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த சம்பவமானது கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.