ஆர்டர் செய்ததே மயில் கேக்..! வந்ததோ தொழுநோய் வான்கோழி கேக்! கதறிய மணப்பெண்!

மணநாளுக்கு மயில் வடிவில் கேக் ஆர்டர் செய்த பெண்ணுக்கு வந்த கேக் அவரை அதிர்ச்சி அடைய வைத்தது.


அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ரெனா டேவிட் என்பவர் வசித்து வந்தார். இவர் தன்னுடைய திருமண நாளை மனைவியுடன் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அப்பகுதியிலுள்ள புகழ்பெற்ற பேக்கரி கடையில் கேக் ஆர்டர் செய்துள்ளார்.

மயில் 2 அடுக்கு கேக் மீது அமர்ந்து தோகையை விரிப்பது போன்றும், அதன் தொகை மீது கப் கேக்குகள் படர்ந்திருப்பது போன்றும், ஒரு கேக்கை ஆர்டர் செய்திருந்தார். கேக் தயாரிப்பதற்காக இந்திய மதிப்பில் 21 ஆயிரம் ரூபாய் அந்த பேக்கரி கடைக்கு அளித்தார். 

இன்று அவருடைய திருமண நாள் ஆகும். இதற்காக அந்த பேக்கரி நேற்றிரவு இவருடைய வீட்டிற்கு அந்த கேக்கை எடுத்து வந்தது. ஆர்வத்துடன் டேவிட் திறந்து பார்த்தார். ஆனால் அவருக்கு அதிர்ச்சி மிஞ்சியிருந்தது. ஏனென்றால் மயிலுக்கு பதிலாக வான்கோழி தன் சிறகுகளை இறந்தது போன்று அந்த கேக் அமைந்திருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த டேவிட் பேக்கரியிடமிருந்து பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். ஆனால் முதலில் பணத்தை திருப்பி அழைக்க அவர்கள் மறுத்துவிட்டனர். டேவிட்டின் சகோதரி இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவு செய்த உடனே பயந்து போன அந்த பேக்கரி கடை பணத்தை திருப்பி அளித்துள்ளது.

இந்த சம்பவமானது ஜார்ஜியா மாகாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.