பிரேமலதாவால் ரோட்டுக்கு வந்தது தேமுதிக! டென்சனில் விஜயகாந்த்! சுதிஷை மாட்டிவிட்ட துரைமுருகன்!

ஐந்து முறை முதல்வர், ஆறு முறை துணை முதல்வர் சந்தித்தபிறகும் விஜயகாந்த் சரியான முடிவு எடுக்காத காரணத்தால் இன்று ரோட்டுக்கு வரவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்.


இன்று பிரதமர் சென்னைக்கு வரும் நிலையில், இன்றே கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவரும்படி கெடு விதிக்கப்பட்டது.

அ.தி.மு.க. சார்பில் 4 தொகுதிகளும் 1 ராஜய்சபா சீட்டும் கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. அதற்கு மேல் சீட் கொடுப்பதற்கு வாய்ப்புஇல்லை என்று தெரிவிக்கப்பட்டதால், சுதிஷ் இன்று காலை துரைமுருகனை தொடர்புகொண்டு மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க ஆசைப்பட்டிருக்கிறார்.

ஆனால், அதற்குள் தி.மு.க.வில் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது. அதனால் எங்களிடம் சீட் இல்லை, ஸ்டாலின் ஊரிலும் இல்லை என்று சொன்னது மட்டுமின்றி, அதனை வெளிப்படையாக பேட்டியும் கொடுத்து அவமானப்படுத்தி விட்டார்.

இன்று சுதீஷ் பா.ஜ.க.வின் பியூஷ் கோயலை சந்தித்த அதே நேரம் தே.மு.தி.க.வின் இளங்கோவன், அனகை முருகேசன் ஆகிய இருவரும் தி.மு.க.வை தொடர்பு கொண்டனர். ஏற்கெனவே தங்கள் பக்கம் தே.மு.தி.க. வரவில்லை என்ற கோபத்தில் இருந்த தி.மு.க. உடனடியாக பத்திரிகையாளர்களைக் கூப்பிட்டு அவமானப்படுத்திவிட்டனர்.

ஆக, இப்போது மோடி மேடையில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் படம் அகற்றப்பட, நடு வீதிக்கு வந்திருக்கிறார். நாளை யாராவது விஜயகாந்த் வீட்டுக் கதவை தட்டுவார்களா என்பது சந்தேகம்தான்.