எங்கள் வயிற்றில் அடிக்கிறார் விஜய் சேதுபதி! கதறும் சிறு வணிகர்கள்! பரபர ரிப்போர்ட்!

நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் ஆன்லைனில் மளிகை பொருள் வாங்கும் விளம்பரத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த இந்த விளம்பரம் ஆனது தற்போது பல்வேறு TV சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.


மண்டி எனப்படும் செயலியானது ஆன்லைனில் மக்கள் மளிகை பொருள் வாங்குவதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விளம்பரப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஆன்லைனில் மளிகை சாமான் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த விளம்பரம் படமானது உள்ளது. இவர் நடித்த இந்த விளம்பரம் ஆனது தற்போது பல்வேறு TV சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

மக்கள் ஆன்லைனிலேயே மளிகை சாமான்களை வாங்கிவிட்டாள் நாட்டில் உள்ள சிறு வணிகர்களின் வியாபாரம் மிகவும் பாதிக்கப்படும். இதனால் இந்த விளம்பரத்தை கண்ட சிறு வணிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ள இந்த விளம்பரப் படத்தை மக்கள் கண்டால் ஆன்லைனில் மளிகை சாமான் வாங்க மாறிவிடுவார்களோ என்ற அச்சத்தில் சிறு வியாபாரிகள் உள்ளனர் . 

மேலும் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்தை ஆன்லைனில் பார்த்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் என உணர்ந்த நடிகர் விஜயசேதுபதி, ஆன்லைனில் மக்கள் மளிகை சாமான் வாங்கினால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என நினைக்க வில்லையா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.