மகனை வாயில் கவ்விய முதலையின் மூக்கிற்குள் விரலை விட்டு ஆட்டி தாய் செய்த செயல்! கேட்போரை அதிர வைக்கும் சம்பவம்!

முதலையிடம் சிக்கிக்கொண்ட கைக்குழந்தையை தாயொருவர் பிரமாண்டமாக மீட்ட சம்பவமானது ஜிம்பாப்வே நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜிம்பாப்வே நாட்டில் ரூண்டே ஆறு பாய்கிறது. இந்த ஆறுக்கு அருகே, 30 வயதான மவுரீனா என்ற பெண் தன் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த ஆற்றில் மொத்தம் 9 முதலைகள் உள்ளன. அவை கிட்டத்தட்ட 20 சென்டி மீட்டர் வரை உயரமாக வளரும் தன்மை பெற்றன.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மவுரீனா, தன் இரு குழந்தைகளை விட்டுவிட்டு வேலை பார்க்க சென்றுள்ளார். அப்போது குழந்தைகள் ஆற்றுக்குள் சென்றனர். அப்போது ஒரு முதலை மவுரீனாவின் 3 வயது மகனான கிடியானை கவ்வியது. உடனடியாக குழந்தை அலற தொடங்கியது. குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டவுடன் விரைந்து சென்ற தாய் முதலையின் பிடியில் தன் குழந்தை சிக்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக முதலையின் தலைமீது குதித்துள்ளார். பின்னர் முதலையின் பிடியிலிருந்து ஒருவழியாக தன்னுடைய குழந்தையை மீட்டெடுத்தார். அதற்குள் முதலை அவருடைய கையை கடித்து விட்டது. உடனடியாக இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது பூரண நலமுடன் இருவரும் இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்து மவுரீனா கூறுகையில், "முதலையின் பிடியில் என்னுடைய குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். முதலையின் சுவாசப்பகுதியை நிலைகுலையச் செய்தார் அது தன் வலிமையை இழக்கும் என்பது எனக்கு தெரியும். ஆதலால் நான் முதலையின் மூக்கினை நன்றாக பிடித்து இழுத்தேன். பின்னர் முதலையின் பிடியில் இருந்து குழந்தையை மீட்டு எடுத்தேன். தற்போது வரை என்னால் நான் செய்ததை நம்ப இயலவில்லை" என்று கூறினார்.

இந்த சம்பவமானது ஜிம்பாப்வே நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.