டைம்ஸ் தமிழ் 2019 இசை விருதுகள். பாடகர் சித் ஸ்ரீராமா அல்லது ஆனந்த் அரவிந்தக்ஷனா?

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக டைம்ஸ் தமிழ் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.


2019ம் ஆண்டின் சிறந்த சினிமா விருதுகள் அறிவிப்பதில் டைம்ஸ் தமிழ் பெருமைப்படுகிறது. வெற்றி பெறும் கலைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. 

இப்போது தமிழ் திரையுலகம் பாடகர்களின் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். புதுசுபுதுசாக இளைஞர்கள் வந்து தங்கள் திறமையைக் காட்டி கொடிகட்டிப் பறக்கிறார்கள். இந்தியாவில் பிறந்து கலிபோர்னியாவில் வளர்ந்தாலும், மூன்று வயதில் இருந்து கர்நாடக இசையைக் கற்று, இன்று மெல்லிசை ராஜாவாகத் திகழ்கிறார். அவரது தாரமே தாரமே, மறுவார்த்தை பேசாதே, உன்கூடவே பொறக்கணும் போன்ற பாடல்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்.

சித் ஸ்ரீராமுக்குப் போட்டியாக இந்த ஆண்டு அனிருத் மற்றும் ஆனந்த் அரவிந்தாக்சன் ஆகிய இருவர் மட்டுமே நிற்கிறார்கள். எப்படியாயினும் அனிருத் தொழில்முறை பாடகர் இல்லை என்பதால், ஆனந்த் மட்டுமே போட்டியில் இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் புதிய தங்கக் குரலுக்கான தேடல் போட்டியில் வெற்றி பெற்றவர். இவரது வெற்றியும் சர்சையானது பலருக்கும் நினைவில் இருக்கலாம்.

இந்த ஆண்டு சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் பாடிய மைலாஞ்சியே பாடல், மிகவும் அற்புதமான குரல் லயம் என்று பாராட்டப்பட்டது. பிரமாண்ட படங்களில் பாடல் வெற்றிபெறுவது எளிது. குறைந்த பட்ஜெடில், புதிய இசையமைப்பாளர் ஒருவரது இசையில் பாடலை வெற்றிபெறுவது எளிதான ஒன்றல்ல.

அந்த வகையில் தன்னுடைய தனித்தன்மையான குரலால், சித்ஸ்ரீராமை விஞ்சி, சிறந்த பாடகர் விருதை தட்டிச் செல்கிறார் ஆனந்த் அரவிந்தாக்சன். இவர் மேலும் பல விருதுகள் பெற்று முன்னேற டைம்ஸ் தமிழ் அன்புடன் வாழ்த்துகிறது.