வீடு கட்டும் வேலையை எந்தெந்த ராசிகளில் ஆரம்பித்தால் தீமை ஏற்படும் என்பதை தெரிந்துகொள்வது அவசியமாகும்.
சொந்த வீடு கட்டப்போறீங்களா? எந்த ராசிக்கு என்ன பலன்னு தெரிஞ்சுக்கோங்க!
மேஷ ராசியில் வீடு கட்டும் வேலையை ஆரம்பித்தால் அங்கு கட்டப்படும் வீட்டில் வாழ்பவர்களுக்கு மிகவும் யோகமான பலன்களாக நடைபெறும். ரிஷப ராசியில் வீடு கட்டும் வேலையைத் தொடங்கினால் அங்கு வாழ்பவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமையும். பொருளாதார நிலை மிக வேகமாக உயர்ந்து கொண்டே போகும்.
மிதுன ராசியில் கட்டிட வேலையை ஆரம்பித்தால் அங்கு வாழ்பவர்கள் தாராளமாக கால்நடைகளை வைத்துக்கொள்வார்கள். அவற்றினால் சில பலன்களும் பெறுவார்கள்.
கடக ராசியில் வீடு கட்டும் வேலை ஆரம்பமானால் அங்கு வாழ்பவர்களின் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். எதுவும் நிரந்தரமாக இருக்காது. இன்பத்தினால் உச்ச கட்ட மகிழ்ச்சியும் ஏற்படாது. அதேபோல் துன்பத்தினால் மனம் வருந்தும் தொல்லைகளும் ஏற்பட்டு விடாது.
சிம்ம ராசியில் வீடு கட்டும் வேலையை ஆரம்பித்தால் அங்கு வாழ்பவர்களுக்கு உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தக்க சமயத்தில் முக்கிய உதவிகளும் கிடைக்கும்.
கன்னி ராசியில் கட்டிட வேலையை ஆரம்பித்தால் அங்கு வாழ்பவர்கள் வியாதிகளால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அவர்களுடைய மனதில் குழப்பங்களும் கவலைகளும் நிறைந்திருக்கும்.
துலா ராசியில் வீடு கட்டும் வேலையை ஆரம்பித்தால் கட்டப்படும் வீட்டில் வாழ்பவர்கள் நல்ல ஆரோக்கியத்தை பெறுவார்கள். பீடை அகலும். சுகமான வாழ்வு அமையும்.
விருச்சிக ராசியில் கட்டிட வேலையைத் தொடங்கினால் அங்கு கட்டப்படும் வீட்டில் வாழ்பவர்களின் செல்வமும் செல்வாக்கும் வேகமாகப் பெறுகும். அரசியலில் உயர்ந்த பதவிகளைப் பெற முடியும்.
தனுசு ராசியில் வீடு கட்டும் வேலையை ஆரம்பித்தால் அங்கு கட்டப்படும் வீட்டில் வாழ்பவர்கள் கடன்களால் மிகவும் துன்பப்பட்டுப் போவார்கள். மனதில் அமைதி நிலத்திருக்காது.
மகர ராசியில் கட்டட வேலையைத் தொடங்கினால் அங்கு வாழ்பவர்களுக்குத் தானியங்களால் லாபம் கிட்டும். கால்நடைகள் பெருகும். அதனாலும் நிறைந்த லாபம் கிடைக்கும்.
கும்ப ராசியில் வீடு கட்டும் வேலையை ஆரம்பித்தால் அங்கு வாழ்பவர்களுக்கு வியாதிகளால் தொல்லை ஏற்படாது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புத்திரர்களால் நன்மை உண்டாகும்.
மீன ராசியில் கட்டிட வேலையை தொடங்கினால் அங்கு வாழ்பவர்கள் உறவினர்களின் பகையைத் தேடிக் கொள்வார்கள். எதிரிகளால் தொல்லைகளும் ஆபத்துகளும் உண்டாகும்.