இளம் தாய் மற்றும் 4 குழந்தைகள் கொடூர கொலை ! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!

ஒடிசா மாநிலத்தில் கிணற்றில் மிதந்த ஒரு பெண் மற்றும் நான்கு குழந்தைகளின் சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


   ஒடிசா மாநிலம் சுந்தர்கார் மாவட்டம் இந்துப்பூரை சேர்ந்தவர் சுடம் முன்டா. ஓட்டுநரான இவருக்கு மங்கிரி என்ற மனைவியும் நான்கு குழந்தைகளும் இருந்தனர். கணவன் வேலைக்கு சென்று விட்ட நிலையில் இவர்களது வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததை கண்டு சந்தேகமுற்ற அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். 

 

அப்போது இவர்களது வீட்டில் இரத்தக் கறை படிந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், ரத்தக்கறையை பின் தொடர்ந்து செல்கையில் பேரதிர்ச்சி காத்திருந்தது. ரத்தக்கறை ஆனது கிணறு வரை சென்று முடிவுற்றது. கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது மங்கிரியும் அவரது நான்கு குழந்தைகளும் சடலமாக மிதந்தனர்.

 

  உடனடியாக கொய்ரா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் 5 பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது நிச்சயமாக கொலையாக இருக்கவே வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

  வீட்டில் துணைக்கு ஆள் இல்லாத போது மர்ம நபர்கள் சிலர் உள்ளே நுழைந்து அந்தப் பெண்ணையும் குழந்தைகளையும் கொலை செய்து கிணற்றில் வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

 

 மந்திர செயல் எதுவும் கொலைக்கு காரணமாக என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த வழக்கில் தடயங்கள் மிக முக்கியமானவை என்பதால் தடயவியல் நிபுணர்களின் உதவியை போலீசார் நாடி உள்ளனர்.