பன்னீர் மகனை ஜெயிக்க வைக்கும் தினகரன்! டென்ஷனில் தங்கதமிழ்ச்செல்வன்!

தேனி தொகுதியில் ஓ.பி.எஸ். மகனை எதிர்த்து தானே நிற்பதாக தினகரன் அறிவித்திருந்தார்.


ஆனால், என்ன நடந்ததோ, திடீரென தங்கதமிழ்ச்செல்வனை நிறுத்திவிட்டார். ஏதோ தங்கத்தை டெல்லிக்கு அனுப்பத்தான் இப்படி செய்திருக்கிறார் என்று நினைத்தால், விவகாரம் வேற மாதிரி என்கிறார்கள்.

அதற்கு ஏற்ப சமீபத்தில் ஒரு வீடியோ வலைத்தளங்களில் வெளியானது. தங்கத்தமிழ்ச்செல்வன் சார்ந்த கள்ளர் சாதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அந்த வீடியோவில் தங்கதமிழ்செல்வன் அவரது பாணியில் ஜாலியாகப் பேசுகிறார்.

 இப்போ பணம் மட்டும்தான் பன்னீர்கிட்டே இருக்கு. முந்தி நானும் அவரும் ஒரே நிலையில இருந்தோம். இன்னும் சொல்லப்போனா, என்னைவிட குறைவாத்தான் அவர் இருந்தார். ஆனா, இப்போ அவர் மதிப்பு என்ன, என் நிலைமை என்ன?

பையனை ஜெயிக்க வைக்கிறதுக்காக ஓட்டுக்கு 5,000 ரூபாய் குடுக்கப் போறாராம். அப்படி தொகுதி முழுக்க குடுக்குறதுன்ன  450 கோடி வேண்டும். கொடுக்கட்டும் கொள்ளையடித்த பணம்தானே? எல்லோரும் இந்தப் பணத்தை வாங்கி, கறி சாப்பிட்டு கடைசியில நமக்குத்தான் குத்தப் போறாங்க என்று சொல்லியிருந்தார்.

வைரலாக பரவிவரும் இந்த வீடியோவில் தினகரன் பற்றியும் கன்னாபின்னாவென்று பேசியது தனியாக அவருக்கு அனுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதைக் கேட்டுவிட்டு தங்கத்துக்கு போன் செய்து கன்னாபின்னாவென்று திட்டினாராம் தினகரன்.

தேனியில எனக்கு நீ ஜெயிச்சாலும் ஒண்ணுதான், தம்பி ஜெயிச்சாலும் ஒண்ணுதான் என்றும் சொன்னாராம் தினகரன்.. என்னாச்சு என்று அ.ம.மு.க. வட்டாரத்தில் விசாரித்தபோது, ஓ.பி.எஸ்.க்கும் தினகரனுக்கும் சண்டைங்கிறதெல்லாம் சும்மாதான். அவங்களும் மத்த தலைவர்களும் நல்ல உறவோடதான் இருக்காங்க. ரவீந்திரநாத்துக்காக முக்கியமான ஆட்கள் தினகரனிடம் தூது வந்தாங்க. அதை தினகரனும் ஏத்துக்கிட்டார். எப்படி தங்கத்தை அமைதியா இருக்கச்சொல்றதுன்னு தெரியாம விழிச்சப்போதான், அந்த வீடியோ வந்திச்சு. இனிமே பாருங்க, தங்கம் மட்டும் சுத்த வேண்டியதுதான் என்கிறார்கள்.

அட போங்கப்பா, யார்... யார்கூட இருக்கீங்கன்னே தெரிய மாட்டேங்குது.