ஏன் பொண்டாட்டி வரமாட்றா.. அதுனால நீ தான்..! மருமகனால் மாமியாருக்கு அரங்கேறிய பயங்கரம்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மனைவி கோபித்துக்கொண்டு போனதால் மாமியாரை தாக்கியதாக மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை புதூரில் ஆதிலெட்சுமி என்பவரின் மகளுக்கும் சந்தோஷ்குமார் என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தோஷ்குமாரின் மனைவி கடந்த சில மாதங்களாக குழந்தையுடன் தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.

இதற்கிடையே உறவினர் வீட்டிற்கு வந்த மாமியார் ஆதிலெட்சுமியை பார்த்த சந்தோஷ்குமார் தகராறில் ஈடுபட்டுள்ளார். மனைவி கோபித்துக் கொண்டு வந்ததற்கு மாமியார்தான் காரணம் என ரகளை செய்துள்ளார். பின்னர் மாமியார் பளார் பளார் என அறை விட்டுள்ளார். இதை பார்த்த ஆதிலட்சுமியின் உறவினர் இந்திரா தடுக்க வந்துள்ளார்.

அவருக்கும் கோபத்தில் கொலை மிரட்டல் விடுத்தார் சந்தோஷ்குமார். இது குறித்து ஆதிலெட்சுமி வைகை அணை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர். மாமியார் என்றும் பாராமல் மருமகன் செய்த செயல் தேனி வட்டாரத்தை பரபரப்பை ஏற்படுத்தியது.