இந்தக் கோயிலுக்கு ஒருமுறை சென்றால் போதும். நினைத்தது நடக்கும் – விசா கூட எளிதில் கிடைக்கும் இந்த விசா கடவுளை தரிசித்தால்...

தெலுங்கானத் தலைநகர் ஹைதராபாத்தில் ஒரு பகுதி சிலுக்கூர். இங்கு அதி அற்புத சக்தி வாய்ந்த பாலாஜி கோயில் உள்ளது. இதன் சக்தி என்ன தெரியுமா?


பொதுவாக சிவபெருமான் சுயம்பாக எழுந்தருளுவது வழக்கம். அந்த வகையில் இங்குள்ள வெங்கடேஸ்வரர் சுயம்பாக எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி நல்குகிறார். திருப்பதிக்கு வரும் பக்தர்கள் சிரமப்படுவார்கள் என ஹைதராபாத்திலேயே வெங்கடேஸ்வரருக்கு ஒரு சன்னதி எழுப்புமாறு அவரே பக்தர் ஒருவரின் கனவில் வந்து கூறியிருக்கிறார். அதன்படி கட்டப்பட்டதுதான் இந்த கோயில். இந்த கோயிலுக்கு சென்று வந்தால், திருப்பதிக்கு சென்று வந்ததற்கு சமமாம்.

இந்த கோயிலுக்கு ஒருமுறை சென்றுவிட்டால் நீங்கள் நினைத்தது அப்படியே நடக்கிறதாம். பெரிதாக எதுவும் செய்யத்தேவையில்லை. முதன்முறையாக இந்த கோயிலுக்கு வருகை தருபவர்கள் 11 சுற்றுகள் இந்த கோயிலைச் சுற்றினால் போதும். அந்த வேண்டுதல் நிறைவேறிய பின் பக்தர்கள் 108 முறை கோயிலைச் சுற்றி வந்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

அமெரிக்கா செல்ல நினைப்பவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்தால் அடுத்த வாரத்திலேயே நல்ல பலன் கிடைப்பதாக கூறப்படுகிறது. இங்கு வந்துசென்ற அனைவருக்கும் விசா கிடைத்துள்ளது என்கின்றனர் பக்தர்கள். இதனால் இந்த கடவுளுக்கு விசா கடவுள் என்றே பெயரிட்டுவிட்டனர்.

இந்த கோயிலுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. இது 500 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டகோயில் ஆகும். இதன் சிறப்பே வேண்டியது நிறைவேறும் என்பதுதான். இன்னும் பல அதிசயங்கள் இந்த கோயிலில் உள்ளன.

பொதுவாக பிரபலமான கோயில் அனைத்திலும் விஐபி தரிசனம் என்று சொல்லி, 100, 500களை வாங்குவர். விஐபிக்களும் நேரடியாக கடவுளை கண்டுவிட்டு செல்வர். ஆனால் இந்த கோயிலில் விஐபி தரிசனம் இல்லை. இந்தியாவின் பிரதமராக இருந்தாலும் கூட இந்த கோயிலில் தனி விஐபி தரிசனம் இல்லையாம். அதுதான் இந்த கோயிலின் விதி என்கின்றனர். இந்த கோயிலில் உண்டியல் என்பதே கிடையாது. பக்தர்களிடன் ஒரு நயா பைசாகூட வாங்காத கடவுள் இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே இவர்மட்டும்தான் போல..

இந்த கோயிலில் உள்ள ரவி மரம் 350 வருடங்களாக இங்கு இருக்கிறது.. இந்த மரத்தை தொட்டால் போதும் நீங்கள் நினைத்தது கட்டாயம் நடக்கும்.