சென்னையில் இழுத்து மூடப்பட்ட சரவண பவன் உணவகம்! அதிர்ச்சி காரணம்!

நாட்டின் மிகப்பெரிய உணவக நிறுவனமான சரவணபவன் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பி.எஃப்,ஈ.எஸ்.ஐ ஆகியவறை நீண்ட நாட்களாக செலுத்தாமல் இருப்பது தெரிய வந்திருக்கிறது.


கடந்த ஜூலை மாதத்தில் சரவணபவன் உணவக உரிமையாளர் கொலை வழக்கில் தண்டனை பெற்று , மருத்துவமனையில் மரணமடைந்த பிறகு மீண்டும் இப்போது சரவணபவன்,சேமநலநிது,தொழிலாளர் ஆயுள் காப்பீடுகளுக்கு 20 கோடிரூபாய் வரை செலுத்த வேண்டி இருப்பதாக நேற்று பிரவிடன் ஃபண்ட் இயக்குநகரக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.அடுத்த விசாரணை செப்டம்பர் 30ல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. சரவணபவன் சங்கிலித்தொடர் உணவகங்களில் இந்தியாவில் மட்டும் 3190 பேர் பணிபுரிகிறார்கள். சரவணபவனுக்கு இந்தியாவில் மொத்தம் 27 கிளைகள் உள்ளன.

அதில் 20 உணவகங்கள் சென்னையில் மட்டுமே இருக்கின்றன. இது தவிர,அமெரிக்கா, இங்கிலாந்து,மற்றும் ஆஸ்த்திரேலிய நாடுகளில் சரவணபவனின் 20 கிளைகள் இயங்குகின்றன. சரவணபவனின் சார்பில் கடந்த மாதம்கூட பி.எஃப் நிதியாக ஒரு கோடி ரூபாய் செலுத்தப்பட்டு இருக்கிறது.

அடுத்த 2020 மார்ச்சில் மேலும் 3 கோடி செலுத்த உள்ளோம் என்று சரவணபவன் நிர்வாகம் தெரிவிக்கிறது.தங்களுடைய கிளைகளில் சில வற்றில் போதுமான வருமானம் இல்லாததால் அவை மூடப்பட்டாலும் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்ப மாட்டோம்,பாண்டிபஜார் கிளையின் லீஸ் ஒப்பந்தம் முடிவுக்கு வந்திருப்பதாலும் அங்கே போதிய பார்க்கிங் வசதி இல்லாததாலும் அந்தக் கிளை மூடப்பட்டுள்ளது.

விரைவில் புதியகட்டிடத்தில் மீண்டும் சரவணபவன் இயங்கத்துவங்கும் என்பதோடுநிர்வாகத்தில் இருக்கும் சில பழையவர்கள் மட்டும் மாற்றப்படுவார்கள்.விரைவில் புதிய வேகத்துடன் திரும்பி வருவோம் என்றும் தெரிவிக்கப் படுகிறது.