தனி ஒருவனாக கோஹ்லிக்கு மரண பயம் காட்டிய தோனி! த்ரில்லான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் RCB வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ipl போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.


முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்தது. அந்த அணியின் பார்திவ் படேல் அதிகபட்சமாக 53 ரன்களை எடுத்தார்.தீபக் சஹர் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி திணறினர். 28 ரன்களை சேர்பதற்குள் 4 விக்கெட்களை சென்னை அணி இழந்தது. பின்னர் களமிறங்கிய தோனி  மற்றும் ராயுடு நிதானமாகி ஆடி சென்னை அணியை சரிவிலிருந்து மீட்டது. ராயுடு 29 ரன்களுக்கு வெளியேற , தோனி மட்டும் தனி ஒருவனாக நின்று பெங்களூரு அணிக்கு மரண பயம் காட்டினார்.

கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை பட்ட நிலையில் உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரை வெளுத்து வாங்கினார். அவர் அடித்த ஒரு சிக்ஸ் மைதானத்தை விட்டே வெளியே சென்றது. கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஷரதுல் தாக்குர் ரன் அவுட் ஆக சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்விடை தழுவியது.