விஜயகாந்துடன் ராமதாஸ் திடீர் சந்திப்பு!

விஜயகாந்த்-ராமதஸ் சந்திப்பு


சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், பாமக தலைவர் ஜிகே மணி, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுடன் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்டோரும் உடன் வருகை தந்துள்ளனர். 

நேற்றே அறிவிக்கப்பட வேண்டிய அதிமுக தொகுதிப் பங்கீடு பட்டியல் தாமதமாகி வருகிறது. காரணம் குறிப்பிட்ட சில தொகுதிகளை தேமுதிகவும் பாமகவும் கேட்டு வருவதால் நேற்றைய தினம் பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

சிக்கலைக் களையும் வண்ணம் தேமுதிக தலைவரும் பாமக நிறுவனத் தலைவரும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். 

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோரும் உடன் உள்ளனர்.

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக பாமக இடையே தொகுதி பங்கீடு இடையில் இழுபறி நீடித்து வருவதால் அதைப்பற்றி பேச்சுவார்த்தை நடத்த விஜயகாந்த் இல்லத்தில் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி விஜயகாந்த் இல்லம் வருகை

விஜயகாந்த் ராமதாஸ் சந்திப்பு

பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்க தேமுதிக  துணை. செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் தேமுதிக முக்கிய நிர்வாகிகள் விஜயகாந்த் இல்லம் வருகை

சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸ் விஜயகாந்தை சந்திக்கிறார். உடல் நலம் குறித்து விசாரிக்கிறார்