பிரபல கன்னட நடிகர் புல்லட் பிரகாஷ் இன்றைய தினம் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்து மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
திடீரென குறைந்த 35கிலோ எடை..! 42 வயதில் மரணம் அடைந்த பிரபல காமெடி நடிகர்! அதிர வைக்கும் காரணம்!

42 வயதாகும் நடிகர் புல்லட் பிரகாஷ் ஐதலகடி , ஆரியன் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வந்தார். படப்பிடிப்பு தளத்திற்கு எப்பொழுதும் தன்னுடைய புல்லட்டில் செல்வதால் இவருக்கு புல்லட் பிரகாஷ் என்ற பெயர் வந்துள்ளது. நடிகர் புல்லட் பிரகாஷ் இதுவரை 375 படங்களில் நடித்துள்ளார்.
இவர் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல் இழந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக மிக கடினமான உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றி 35 கிலோ எடையை அதிரடியாகக் குறைத்தார். இவர் திடீரென்று உடல் எடையை குறைப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இவருடைய உடல்எடை அதிரடியாக குறைந்ததால் தான் இவருக்கு உடலில் பல உபாதைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக நடிகர் பிரகாஷ் எந்த திரைப்பட படப்பிடிப்புக்கும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் மோசமான நிலை அடைந்ததால் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரின் உடல் நிலை மிக மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை விடுத்தனர். இந்நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி நடிகர் புல்லட் பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மறைவு அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை உண்டாக்கியுள்ளது.
நடிகர் பிரகாஷ் கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் கிச்சா சந்திப், தர்ஷன் , உபேந்திரா ஆகியோருடன் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் 42 வயதாகும் இந்த நடிகரின் மறைவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.