8 வழிச்சாலை திட்டம்: ஏழை மக்களிடம் ரூ.2 கோடி ஆட்டை போட்ட பாமக! பகீர் தகவல்!

8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து வழக்கு நடத்துவதாகக் கூறி ரூ.2 கோடியை பாமக ஆட்டை போட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.


இதுதொடர்பாக, திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜா தெரிவித்துள்ள புகாரின் விவரம் பின்வருமாறு: சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக் கோரி, முதன்முதலில், திமுகவைச் சேர்ந்த ரவிந்தீரன்தான், உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உதவியுடன் வழக்கு தொடர்ந்தார். 

இதன்பிறகே மற்றவர்கள் வழக்கு தொடுக்க ஆரம்பித்தனர். இதில், 4வது நபராக வந்தவர்தான் அன்புமணி. 8 வழிச்சாலை தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரித்த நீதிமன்றம், ஒட்டுமொத்தமாக, திட்டத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, 8 வழிச்சாலை பற்றிய வழக்கை நடத்துவதற்காக, பாமக.,வினர் சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளிடம் தலா ரூ.2000 வீதம் வசூலித்துள்ளனர்.

இப்படியாக, சுமார் ரூ.2 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுகவோ எந்த காசும் வாங்காமல் வழக்கு நடத்தியதை, பாமகவினர் மறந்து விடக்கூடாது.இப்படிப்பட்ட அயோக்கியத்தனம் நிறைந்த அன்புமணி, திமுக.,வினரை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ராஜா விமர்சித்துள்ளார்.