நேபாள எல்லையில் சடலமாக கிடந்த நித்தியின் கைலாசவாசி..! சொகுசு கப்பலுக்கு சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்!

நித்தியானந்தாவின் குஜராத் ஆசிரமத்திலிருந்து கைலாசத்துக்கு செல்ல முயன்ற இளைஞர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில் இயங்கிவந்த நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சதீஷ் செல்வகுமார் என்ற இயற்பெயரை கொண்ட ஸ்ரீ ஈஸ்வர நித்யானந்தா. குஜராத்தில் இயங்கிவந்த ஆசிரமத்தில் யோகினி பீட சம்பவங்களில் முதன்மையாக திகழ்ந்தவர் ஈஸ்வர நித்யானந்தா.

இவர் மா பிராணபிரியா என்ற முக்கிய சீடர்களின் வலதுகரமாக திகழ்ந்தார். இவர் கடந்த சில நாட்களாகவே அகமதாபாத் ஆசிரமத்தில் இருந்து கைலாசம் செல்ல இருப்பதாக கூறி வந்தார். அதன்படி சில நாட்களுக்கு முன்னர் இவர் காணாமல் போனார். நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சீடர்கள் பல இடங்களில் தேடியும் இவரை கண்டுபிடிக்க இயலவில்லை.

இதனிடையே செல்வகுமார் நேபாள எல்லையில் ஆதரவற்ற நிலையில் சடலமாக கிடைத்த தகவல் நித்யானந்தா ஆசிரமத்திற்கு கிடைத்துள்ளது. உடனடியாக நித்யானந்தாவின் சீடர்கள் அவசர அவசரமாக சென்று ஈஸ்வரன் நித்யானந்தாவின் உடலை வாங்கிக்கொண்டு தகனம் செய்தனர். பின்னர் நாளை ஈஸ்வரன் நித்யானந்தாவுக்கு காரியம் செய்ய இருப்பதாக அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மகன் இறந்துபோன செய்தியை கேட்டறிந்தார் நித்யானந்தாவின் பெற்றோர் பேரதிர்ச்சி அடைந்தனர்.  இந்நிலையில் ஈஸ்வரன் நித்யானந்தாவின் உறவினர்கள் அவருடைய மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாக புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவமானது குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.