மகாராஷ்டிரா சென்ற மோடி! வரவேற்ற உத்தவ் தாக்கரே! அரசியல் பரபரப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வரவேற்றார்


மகாராஷ்டிராவில் இன்று மற்றும் நாளை காவலர் சார்ந்த நிகழ்ச்சி ஒன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு புனே விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

அவரை வரவேற்பதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் பதவியில் இருக்கும் உத்தவ் தாக்கரே பூனே விமான நிலையத்திற்கு வந்திருந்தார். 

அதுபோல் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் , ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி , உள் துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நம்முடைய பாரத பிரதமர் மோடியை வரவேற்றனர்.