கேட்டில் கட்டி வைத்து உயிரோடு எரிக்கப்பட்ட இளைஞர்! தேனி பயங்கரம்!

கழிவு நீர் உந்து நிலையத்தின் கேட்டில் கட்டிவைத்து ஒருவரை எரித்துக் கொன்ற சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தேனி மாவட்டத்தில் போடி நகராட்சி அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் கழிவு நீரானது போடியில் உள்ள கழிவு நீர் உந்து நிலையத்தில் கலந்து விடப்படுகின்றது. இது மதுரை- கொச்சி நெடுஞ்சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளது. 

அந்த வழியாக அரசு பேரூந்து ஒன்று நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த உந்து நிலையத்தின் கேட் தீப்பிடித்து எரிவதை பேருந்து ஓட்டுநர் கண்டுள்ளார். உடனே அவர் அருகில் சென்று பார்த்தார். அப்போது ஒரு மனிதனை கேட்டு கட்டிவைத்து உயிருடன் எரிப்பது போன்று தோற்றமளித்ததால், அவர் போடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த உந்து நிலையத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், தீயணைப்பு படையினரின் உதவியோடு சிறிது நேரத்தில் எரிந்த சடலத்தினை மீட்டெடுத்தனர். மேலும் முதற்கட்ட விசாரணையில், எரித்துக் கொல்லப்பட்டவர் 30 வயது இளைஞனாக இருக்கக்கூடும்  என்று கண்டுபிடித்தனர். மேலும் அந்த இடத்தின் சுற்றுவட்டாரத்தில் ரத்தக் கறைகள் மிகுதியாக இருந்ததால் அந்த இளைஞனை அடித்து துன்புறுத்திய பிறகு கட்டிவைத்து எரித்து இருக்கலாம் என்றும் காவல்துறையினர் வியூகிக்கின்றனர்.

அருகில் ஏடிஎம் கார்டுகள், கைகடிகாரம் முதலியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் கொலை செய்யப்பட்டவர் யார்?? கொலை செய்தவர்கள் யார் என்பதனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உந்து நிலையத்திற்கு அருகில் மது கடை ஒன்று உள்ளது. அங்கு மது வாங்குபவர்களுள் சிலர், உந்து நிலையத்தின் வாசலில் மது அருந்துவது வழக்கம். இதனைக் கருத்தில் கொண்ட காவல்துறையினர் மது அருந்தும் போது ஏதேனும் தகராறு ஏற்பட்டு இவ்வாறு எரித்து கொலை செய்திருக்கக்கூடும் என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். 

காவல்துறையினர் தனிப்படை அமைத்து கூடிய விரைவில் கொலையாளிகளை கண்டு பிடிப்போம் என்று கமிஷனர் உறுதியளித்துள்ளார்.