துணை நடிகைகளை அழைத்து வருகிறேன்! ஆசையை தூண்டி இளைஞர் செய்த விபரீதம்! சென்னை பரபரப்பு!

சினிமா நடிகைகளை அழைத்து வருவதாக கூறிய நபர், ஆட்டோவை திருடிச்சென்ற சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் புளியந்தோப்பு என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு ஜாவித் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். ஓலா நிறுவனத்தின் கீழ் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

சமீபத்தில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து சாலிகிராமம் வரை செல்வதற்கான ஓலா ஆப் மூலம் ஒருவர் ஆட்டோவை பதிவு செய்துள்ளார். அவருடைய பெயர் துரை. இதையடுத்து ஜாவித் தன்னுடைய ஆட்டோவின் மூலம் அவரை சாலிகிராமத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். 

பொழுதுபோக்கிற்காக துரை,  ஜாவித்திடம் பேச்சு கொடுத்து வந்தார். அப்போது தான் சினிமா துறையில் ஏஜென்டாக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். சிறுவயதிலேயே நடிக்க வேண்டும் என்ற ஆசை ஜாவித்துக்கு இருந்தது. ஆனால் குடும்ப சூழ்நிலையின் காரணமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். துரை கூறியதை நம்பிய ஜாவித், தன்னை ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடியுமா என்று கேட்டுள்ளார்.

உடனே ஜாவித் நிச்சயமாக நடிக்க வைக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் தனக்கு நிறைய துணை நடிகைகளை தெரியுமென்றும், அவர்களை எப்பொழுது வேண்டுமென்றாலும் அழைத்து வரலாம் என்றும் ஆசை காட்டியுள்ளார்.

சாலிகிராமத்தில் உள்ள ஒரு தேநீர்க்கடையில் ஆட்டோவை நிறுத்த கூறிய துரை, ஆட்டோவில் சென்று தெருக் கடைசியில் இருக்கும் 3 துணை நடிகைகளை அழைத்து வருவதாக கூறியுள்ளார். அந்த தேனீர் கடையிலேயே ஜாவித் நின்று கொண்டிருந்தார். நெடுநேரமாகியும் துரை வராததால் சந்தேகமடைந்த ஜாவித், அங்கு சென்று பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அப்போதுதான் துரை மோசடி செய்து தன்னுடைய ஆட்டோவை திருடி சென்றுவிட்டதை ஜாவித் புரிந்து கொண்டார். உடனே ஜாவித் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் ஆட்டோவை காணவில்லை என்று புகாரளித்தார். காவல்துறையினர் அப்பகுதியில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை உபயோகித்து துரையை கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர். இந்த சம்பவமானது சென்னையில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.