ஜெயலலிதாவை ஜெயிக்க வைத்த உளவுத்துறை ரிப்போர்ட்

2014 மக்களவைத் தேர்தல். கூட்டணிக் கட்சிகள் பற்றி எந்த கவலையும் இல்லாமல் ஜெயலலிதா தேர்தல் களத்தில் இறங்கி, ‘மோடியா… லேடியா?’ என்று ஓட்டு வேட்டையாடினார். அதில் மாபெரும் வெற்றியும் பெற்றார். கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்கும் தைரியம் ஜெயலலிதாவுக்கு எப்படி வந்தது என்பது குறித்து அன்றைய உளவுத்துறை அதிகாரி சொன்ன தகவல் இது.


2014 மக்களவைத் தேர்தல். கூட்டணிக் கட்சிகள் பற்றி எந்த கவலையும் இல்லாமல் ஜெயலலிதா தேர்தல் களத்தில் இறங்கி, ‘மோடியா… லேடியா?’ என்று ஓட்டு வேட்டையாடினார். அதில் மாபெரும் வெற்றியும் பெற்றார்.

கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்கும் தைரியம் ஜெயலலிதாவுக்கு எப்படி வந்தது என்பது குறித்து அன்றைய உளவுத்துறை அதிகாரி சொன்ன தகவல் இது.

’ஜெயலலிதா கொண்டுவந்த தாலிக்குத் தங்கம் திட்டம், ஏழை மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றிருந்தது, அதுபோல் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கும் திட்டம், அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு 16 பரிசு பொருட்கள் வழங்கும் திட்டம், இலவச கறவை மாடு, வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், கிராமத்தில் உள்ள பெண்கள், மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம், இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் போன்ற திட்டங்கள் மக்கள் மனதில் அழியாத இடம் பிடித்திருந்தன.

ஆனால், இவை அனைத்திற்கும் மேலாக அம்மா உணவகத்தால் அனைத்து தரப்பு மக்களும் மிகவும் கவரப்பட்டிருந்தனர். அம்மா உணவகம் பற்றி பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்டது. நல்ல சுவையான தரமான உணவு வழங்குவதாக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

எனவே, அம்மா உணவகம் இருக்கும்வரை ஜெயலலிதாவை அசைக்க முடியாது என்று அம்மா உணவகத்தை முன்னிலைப்படுத்தி தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்ட அறிக்கையை கொடுத்தோம். நிச்சயம் இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுவிட முடியும் என்று உறுதி அளித்தோம். நாங்கள் சொன்னதை முதல்வர் ஜெயலலிதா அப்படியே ஏற்றுக்கொண்டு, கூட்டணி பற்றி கண்டுகொள்ளாமல் களத்தில் இறங்கினார், வெற்றியும் பெற்றார்’ என்றார்.

சைதாப்பேட்டையில் சைதை துரைசாமி நடத்திவந்த மலிவு விலை உணவகம் எப்படி அவரது மேயர் காலத்தில் அம்மா உணவகமாக மாறியது..?

நாளை முதல் ஞானகுரு இணையதளத்தில், ‘என்ன செய்தார் சைதை துரைசாமி?’ தொடர் ஆரம்பம். படிக்கத் தவறாதீர்கள்.

https://gyaanaguru.com/