குறுக்கிட்ட மழை! இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்த DLS! தொடரையும் கைப்பற்றி அசத்தல் !

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் DLS முறையில் வெற்றி பெற்றுள்ளது .


டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது .இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா 67 ரன்களை விளாசினார் .

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது . தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஆட்டம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது . இதனால் DLS முறைப்படி இந்திய அணி 22 ரன்கள் முன்னிலையில் இருந்ததால் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது .

பேட்டிங்கில் 20 ரன்களும் பந்துவீச்சில் 2 விக்கெட்களையும் வீழ்த்திய க்ருநாள் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் .

இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது .