அஜித் வீட்டில் வருமான வரித்துறை சோதனை? பரபரப்பு தகவல்கள்!

நடிகர் அஜித் வீட்டில் விரைவில் வருமான வரித்துறை சோதனை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


பொங்கலுக்கு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் தான் தற்போது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. வழக்கமாக அஜித் படம் வெளியாகும் போது பரபரப்பாக இருக்கும் பின்னர் அந்த பரபரப்பு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

   ஆனால் விஸ்வாசம் வெளியாகி 2 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது வரை பரபரப்பு நீடிக்கிறது.இதற்கு காரணம் படத்தின் விநியோகஸ்தர் கோட்டப்பாடி ராஜேஸ் தான். படம் வெளியாகி ஒரு வாரம் கூட நிறைவடையாத நிலையில் தமிழகத்தில் மட்டும் 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கொளுத்திப் போட்டுள்ளார்.

   தமிழகத்தில் மட்டுமே 125 கோடி ரூபாய் என்றால் பிற மாநிலங்கள், பிற நாடுகளிலும் வசூல் இருந்திருக்கும். எனவே விஸ்வாசம் படம் வெளியான குறுகிய காலத்திற்குள் அதிக வசூலை பெற்று இருப்பதாக படத்தின் விநியோகஸ்தரே அதிகாரப்பூர்வமாக கூறியிருப்பதால் நிச்சயமாக வருமான வரித்துறையினரின் கண்களை உருத்தியிருக்கும்.

   இதே போலத்தான் நடிகர் விஜய் நடித்து புலி படம் வெளியாகும் சமயத்தில் விஜய், அவரதது பினாமி பி.டி. செல்வகுமார், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்ட பலர் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

   இதற்கு காரணம் புலி படம் எவ்வளவு பொருட் செலவில் எடுக்கப்பட்டது என்பதை விளம்பரப்படுத்தியது தான். அதாவது சுமார் 160 கோடி ரூபாய் செலவில் புலி படத்தை தயாரித்துள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் கூறி வந்தார்.

  இதனை தொடர்ந்தே விஜய், பி.டி. செல்வகுமார், கலைப்புலி தாணு உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறை புகுந்தது. இதனை தொடர்ந்து விஜய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் கூட வருமான வரித்துறையில் இருந்து தகவல்கள் கசியவிடப்பட்டன.

   இந்த நிலையில் தான் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் கலெக்சன் பலரின் கண்களை உருத்த தொடங்கியுள்ளது. அஜித் வழக்கமாக தனது சம்பளத்தை வெள்ளைப் பணமாக பெற்று சரியாக வரி கட்டிவிடுவார் என்கிற ஒரு பேச்சு உண்டு. அதே சமயம் தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ், விநியோகஸ்தர் கோட்டபாடி ராஜேஸ் போன்றோர் வீடுகளில் சோதனை நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

   அப்போது நடிகர் அஜித் வீட்டிற்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் செல்ல வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் அஜித் இத்தனை நாட்கள் சரியாக வரி செலுத்தினாரா? வரி செலுத்துவது குறித்து அஜித் தரப்பில் கூறப்படும் தகவல்கள் உண்மை தானா என தெரிந்துவிடும்.

   இதனிடையே நடிகர் அஜித்தை பா.ஜ.கவில் சேர்க்க முயற்சி நடைபெற்றதாகவும் ஆனால் இந்த முயற்சிக்கு ஆரம்பத்திலேயே அஜித் முற்றுப்புள்ளி வைத்ததை சிலர் விரும்பவில்லை என்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் வாழு வாழ விடு என்கிற ரீதியில் அஜித் வெளியிட்ட அறிக்கையும் அவர்களை எரிச்சலாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

   எனவே அஜித்தின் இமேஜை டேமேஜ் செய்ய வருமான வரித்துறை பயன்படுத்தப்படலாம் என்றும் ஒரு பேச்சு இருக்கிறது.