வாடகை வீட்டில் குடியிருக்கிறீர்களா..? அந்த வீட்டில் இந்த அமைப்பு இருந்தால் விரைவில் சொந்த வீடு யோகம் கிடைக்கும்

சூரியன் பரணி 3 ஆம் பாதம் கார்த்திகை 4 பாதங்கள் ரோகிணி இரண்டாம் பாதத்தில் சஞ்சாரம் செய்யும் காலம் அக்னி நட்சத்திரம் எனப்படும்.


இந்த காலங்கள் ஏறக்குறைய 20 நாட்களுக்கு இருக்கும். இந்த காலங்களில் சுப காரியங்கள் செய்வது நல்ல பலனைத் தராது. வீட்டின் அறைகள் அனைத்தும் சேர்ந்து 5 7 9 11 என்ற எண்ணிக்கையில் அமைவது நலம். வீட்டில் எதிரெதிரான இரண்டு கூடங்கள் இருக்கக்கூடாது. மனை கட்ட பழைய பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. அதேபோல் இன்னொரு வீட்டில் இருந்து பிரித்த பொருட்களையும், ஏலம் எடுத்த பழைய பொருட்கள், திருடிக் கொண்டு வந்த பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது. தமக்கு சொந்தமானதாகவே இருந்தாலும் பழைய வீட்டை புதுப்பிக்க முயலும் போது சுபமுகூர்த்தம் பார்த்தே தொடங்க வேண்டும். மனையில் முதலில் வைக்கும் சுவர் பழுதாகி சாய்ந்து விழுமானால் அத்துடன் மனை கட்டுவதை நிறுத்தி விட வேண்டும்.

நான்கு புறமும் தாழ்வாரங்கள் அமைப்பது நல்லது. வீட்டின் முதல் தலைவாசல் மிக உயரமாக அமையக்கூடாது. கூடியவரை தலைகுனிந்து செல்லுமாறு அமைத்தல் மங்களகரமானதாகும். கட்டிய வீட்டின் சுவரில் வெடிப்பு கீறல் விழக்கூடாது. அப்படியானால் குடியிருப்பை காலி செய்து அதை சரி செய்த பின்னர்தான் குடியேற வேண்டும். மீண்டும் கிரகப்பிரவேசம் செய்தே குடியேற வேண்டும்.

மனையின் வடக்கிலோ, கிழக்கிலோ காலியிடம் விட்டு அதில் பூஞ்செடிகள், தோட்டம் அமைக்கலாம். வீட்டின் வாசற்படிகள் ஒற்றை எண்ணிக்கையிலேயே அமைய வேண்டும்.

குறிப்பாக தென் மேற்கு வாயு வளர்ந்து உள்ள வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் சொந்த வீடு கட்டும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள் என்பதே உண்மை.