பெண்ணுக்கு பற்களில் இருந்து வாய்க்குள் வளர்ந்து கொண்டே செல்லும் முடி..! சோதனை செய்து அதிர்ந்த டாக்டர்கள்!

பெண் ஒருவருக்கு பற்களின் ஈறுகளில் இருந்து கண்ணிமை போல் முடி வளர்வதை பார்த்த மருத்துவர்கள் உள்ளனர்.


பொதுவாகவே முடி என்பது உடலின் பல பகுதிகளை வளர்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இத்தாலியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு பற்களில் உள்ள ஈறுகளிலிருந்து கண்ணிமை போல் வளர்ந்துள்ள முடியைப் பார்த்து அந்நாட்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அந்த மூடியையும் அந்த இளம் பெண்ணின் வாயில் இருந்து நீக்கியுள்ளனர்.

புதுமையான நோய்க்கான காரணங்களையும் அந்த அம்மாள் மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். நோய்க்கான முக்கிய காரணமாக PCOS (Polycystic ovary syndrome)  எனப்படும் சினைப்பை பாதிக்கும் நோய் கூறப்படுகிறது. ஆண்ட்ரோஜென்  எனப்படும் சுரப்பி அளவுக்கு அதிகமாக சுரப்பது இந்த பிரச்சினைக்கான முக்கிய காரணமாகும்.

அதாவது ஆண் ஹார்மோன்களை அதிகப்படியாக சுரக்க வைப்பதால் பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வது, ஒழுங்கற்ற மாதவிடாய், உடல் பருமன் அதிகரிப்பது போன்ற பலவிதமான பிரச்சினைகள் உருவாகும். இதுதான் இத்தாலியை சேர்ந்த அந்தப் பெண்ணுக்கும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த பிசிஓஎஸ் பாதிப்பால் அவருக்கு சினைப்பை பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் உடலில் டெஸ்டோஸ்ட்ரோன் சுரப்பி அளவுக்கு அதிகமாக சுரந்து உள்ளதாகவும் அதனால்தான் அந்தப் பெண்ணின் பற்களின் ஈறுகளில் இருந்து முடி வளர்ந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆகையால் டெஸ்டோஸ்ட்ரோன் சுரப்பி சுரப்பதை குறைத்து விட்டால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அந்த பெண்ணிற்கு குழந்தை பிறப்பை கட்டுப்படுத்தும் விதமான மாத்திரைகளை வழங்குவதன் மூலம் இந்த பிரச்சினையில் இருந்து அவரால் விடுபட முடியும் எனவும் மருத்துவர்கள் அவருக்கு பரிந்துரைத்து இருக்கின்றனர். பெண்ணின் ஈறுகளில் இருந்து வளர்ந்து வரும் முடியையும் நீக்கி அந்த தசையின் ஒரு பகுதியையும் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனையின் முடிவில் இன்னும் மிகத்தெளிவான விஷயங்கள் தெரிய வரும் எனவும் அறிவித்துள்ளனர்.