ஏறிக்கொண்டே போன தங்கம் விலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக. சரிவு... எவ்வளவுன்னு தெரியுமா?

புத்தாண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் தங்க விலை ரூ. 32944/- ஐ எட்டியது.


கடந்த 3 தினங்களாக தங்கம் விலையில் சிறிது சரிவு ஏற்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மூன்று தினங்களில் ஒரு சவரனுக்கு ரூ. 712/- குறைந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 4,050 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 32,400 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,856 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 30,848 ஆகவும் இருந்தது.

இன்று சவரனுக்கு ரூ. 152/- குறைந்து 22 கேரட் தங்கத்தின் விலையானது ஒரு கிராமுக்கு ரூ. 3,837 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.30,696 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலையானது ரூ. 168/- குறைந்து ஒரு கிராம் ரூ.4,029 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.32,232 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:

5.2.2020 - 1 grm – Rs. 4,029/-, 8 grm – 32,232/- ( 24 கேரட்)

5.2.2020 – 1 grm – Rs. 3,837/-, 8 grm – 30,696/- (22 கேரட்)

வெள்ளி விலையானது கிராமுக்கு ரூ.49.40 ஆகவும் கிலோவுக்கு ரூ.49,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..