திடீரென ஊருக்குள் புகுந்த கோயில் யானை! கண்ணில் கண்டதை எல்லாம் துவம்சம் செய்யும் வைரல் வீடியோ!

கோயில் திருவிழாவிற்காக கேரளாவில் ஒரு யானை அழைத்து வரப்பட்டது . அந்த யானை திடீரென்று மதம் பிடித்து ஓடியதில் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.


யானையின் பெயர் வடக்கும்நாதன் கணேசன் என்பதாகும். மதம் பிடித்து ஓடியதில் நான்கு வாகனங்களை புரட்டிப்போட்டது மட்டுமில்லாமல், தன்னை அடக்க வந்த யானைபாகனையும் தாக்கியது. பாலக்காடு மாநகராட்சியில் உள்ள குழல்மன்னம் என்னும் இடத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.

மக்களை பீதி அடையச்செய்த யானையின் மதவெறியாட்டப்படங்கள் மற்றும் விடியோக்கள் வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகிவிட்டன. விடியோக்களின்  மூலமாக பல வீடுகளில் சுவர்களும், கேட்டும் உடைந்துக்கிடப்பதை நம்மால் காண முடிகின்றது.

வியாழக்கிழமை மதியம் மூன்று மணிக்கு யானையின் வெறியாட்டம் தொடங்கியுள்ளது. ஒரு வீட்டிற்கு சென்று, அங்கிருந்த காரை பார்க்கிங் ஏரியாவிலிருந்து விசிறியடித்துள்ளது. மூன்று மணிநேரப்போராட்டத்திற்கு பிறகு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்